கரூரில் ஒன்று சேர்ந்து பிபி ஊதி ஜோதி மணியை விரட்டியடித்த இளைஞர்கள்..!Youths prevented Jyoti Mani from campaigning in Karur

Youths prevented Jyoti Mani from campaigning in Karur

கரூரில் ஒன்று சேர்ந்து பிபி ஊதி ஜோதி மணியை விரட்டியடித்த இளைஞர்கள்..!

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது முதல் தினந்தோறும் செல்லும் இடமெல்லாம் மக்களால் தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் விரட்டியடிக்கும் ஒரே வேட்பாளர் கரூர் தொகுதி ஜோதிமணி.

உள் ஊரில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை மேலும் செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் இதற்கு முன்பு யார் பெரியவர்கள் கரூரில் என்ற போக்கு நிலவியது.

இதனால் சிறையில் இருந்து கொண்டே ஜோதிமணி வெற்றியை செந்தில்பாலாஜி தடுக்கிறார் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் வெளி வருகிறது, 2019 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி கரூர் தொகுதியில் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

அதற்கு பிறகு 5 ஆண்டுகள் அவர் தொகுதி பக்கம் வரவில்லை டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார் இதன் அடிப்படையில் மீண்டும் கருர்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஜோதிமணிக்கு கரூர் தொகுதி வழங்கக்கூடாது என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கும் மற்றும் தேசிய தலைவர்களுக்கும் தீர்மானத்தை அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை செந்தில் பாலாஜி தரப்பும் ஜோதிமணி கரூரில் வளர்வதை விரும்பவில்லை இது போன்ற சூழ்நிலையில் ஜோதிமணி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கேள்விகளை கேட்டு துரத்தி அடிக்கிறார்கள்.

முக்கியமாக மணப்பாறை, வேடசந்தூர், சில பகுதிகளில் ஜோதி மணியிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் அது பற்றிய வீடியோவும் வெளி வந்தது இன்று ஜோதிமணி மருங்காபுரி அடைக்கம்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார் அப்போது உள்ளூர் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து.

திருவிழாவில் விற்கப்படும் பிபியை கொண்டு அதிக சத்தத்தை எழுப்பி ஜோதி மணியை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தார்கள் இவர்களின் இந்த செயலை பார்த்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜோதி மணியை காரில் இருந்து கீழே இறங்க விடாமல் தடுத்து பிரச்சாரம் செய்ய விடாமல் துரத்தி அடித்தார்கள்.

மோடியின் ரோடு ஷோவை கேலி கிண்டல் செய்யும் அதிமுக திமுக..!

இது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது செய்தி சேனல்களும் இதை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து வெளியிடுகிறார்கள்.

Youths prevented Jyoti Mani from campaigning in Karur
Youths prevented Jyoti Mani from campaigning in Karur

ஜோதிமணிக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு

கேள்வியை கரூர் மக்களிடம் கேட்டால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் தொகுதி பக்கம் வரவே இல்லை தற்போது வாக்கு சேகரிக்க மட்டும் வருகிறார்.

இந்த முறை வெற்றி பெற்றால் நிச்சயம் அடுத்த 5 ஆண்டு தொகுதி பக்கம் வரமாட்டார் இது போன்ற வேட்பாளர்களுக்கு நிச்சயம் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று தெரிவிக்கிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment