இந்த தேர்தல் மூலம் எந்த கட்சி தனது வாக்கு வங்கியை அதிகரிக்கும்..!Which party will increase its vote bank through this pm election

Which party will increase its vote bank through this pm election

இந்த தேர்தல் மூலம் எந்த கட்சி தனது வாக்கு வங்கியை அதிகரிக்கும்..!

நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி தனது வாக்கு வங்கியை அதிகரித்து, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று இந்த தேர்தலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, பாமக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதில் எந்தக் கட்சி தன்னுடைய வாக்கு வங்கியை நிலைநிறுத்தி மேலும் வாக்கு வங்கியை அதிகரிக்கிறது என்பதை நடைபெறுகின்ற தேர்தல் பிரச்சாரம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி குறைகிறது

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள், முக்கியமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு.

பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, போன்ற கட்டண உயர்வுகளால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளார்கள், மேலும் திமுக அரசு 2021 ஆம் ஆண்டு 520 வாக்குறுதிகளை வழங்கி விட்டு ஆட்சிக்கு வந்தது.

அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் வடசென்னை,அம்பத்தூர், திரு.வி.க நகர், உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வீடுகளில் புகுந்து மக்களுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது.

அப்போது திமுக அரசு சரியாக மக்களை காப்பாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது,இந்த காரணங்களால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் மக்களிடத்தில் வாக்குவாதம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சில இடங்களில் மக்கள் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை திருப்பி அனுப்பினார்கள்.

முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி ஜோதிமணி அவர்களை இளைஞர் ஒருவர் 5 ஆண்டுகாலமாக நீங்கள் தொகுதி பக்கம் வரவில்லை தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து உள்ளீர்கள் வேலை வாய்ப்பிற்கு என்ன செய்தீர்கள் என்று சரமாரியான கேள்வி எழுப்பினார்.

இதனை சமாளிக்க முடியாமல் ஜோதிமணி அவர்கள் உடனடியாக தன்னுடைய காரில் ஏறினார் பின்னர் சிறிது நேரம் கழித்து தொலைக்காட்சி நண்பர்கள் ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட ஜோதிமணி அவர்கள்.

தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் தெரிவித்தது மோடி அரசு எப்பொழுது அகற்றப்பட்டு ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்ற பிறகு.

நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்ற பதிலை தெரிவித்தார், முக்கியமாக கருர் தொகுதி ஜோதிமணி அவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்களிடத்தில் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

இப்படி திமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்களிடத்தில் கடுமையான எதிர்ப்பை இந்த தேர்தலில் சந்தித்து வருகிறார்கள்.

திமுக சேலத்தில் மாநில உரிமை மீட்பு மாநாடு நடத்தியது அதில் அவர்கள் எதிர்பார்த்தபடி கூட்டம் கூடவில்லை மேலும் அந்த மாநாட்டில் சில திமுக தொண்டர்கள் கார்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள் மற்றும் ஒருவர் டேபிளில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.

சிலர் திமுக தொண்டர்கள் சமையல் செய்யும் பக்கம் சென்று உணவு பொருட்களை அள்ளி சென்றார்கள் இது பற்றிய வீடியோ அப்பொழுது வெளியாகி கடுமையான விமர்சனம் திமுக மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்பட்டது.

இப்படி திமுக தொடர்ந்து தமிழகத்தில் அவப்பெயரையும் சந்தித்து வருகிறது இது 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் திமுகவிற்கு.

அதிமுக தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது

அதிமுகவின் உட்கட்சி பூசல் முடிந்து கடந்த இரண்டு வருடங்களாக கட்சியில் ஆட்களை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது முக்கியமாக கட்சியை விட்டு சென்ற முன்னாள் தலைவர்கள் மாற்றுக் கட்சியில் உள்ள முக்கிய நபர்களை அதிமுக கட்சியில் இணைத்து வருகிறது.

அதிமுக மதுரையில் நடத்திய மாநாட்டில் மிகப்பெரிய கூட்டம் கூடியது தற்போது அதிமுக தன்னுடைய பழைய நிலைமைக்கு வந்து விட்டது 2026 ஆம் ஆண்டு நிச்சயம் அதிமுக ஆட்சியை கைப்பற்றும்.

Which party will increase its vote bank through this pm election
Which party will increase its vote bank through this pm election

நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கிறது

நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தன்னுடைய வாக்கு வங்கி சதவீதத்தை ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிகரித்து வருகிறது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 7 சதவீத வாக்குகளை பெற்றது.

தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்கு பெரும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.

பாஜகவும் வளர்ந்து வருகிறது

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அந்த கட்சி தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

கோவையில் சர்வதேச தரத்தில் தமிழகத்தில் 2வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

நாங்கள் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என பாஜக தெரிவிக்கிறது பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை கட்சியில் இணைத்து வருகிறது பாஜக.

தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பாஜக பற்றிய செய்தியை தினந்தோறும் வரவைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment