காவிரியின் குறுக்கே நிச்சயம் மேகதாது அணை கட்டுவோம் கர்நாடகா துணை முதலமைச்சர் உறுதி..!We will definitely build Meghadatu Dam across Cauvery

We will definitely build Meghadatu Dam across Cauvery

காவிரியின் குறுக்கே நிச்சயம் மேகதாது அணை கட்டுவோம் கர்நாடகா துணை முதலமைச்சர் உறுதி..!

காங்கிரஸ் உடன் கூட்டணி இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக எப்பொழுதுமே காவிரி நீரை பெற்றுக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை டாக்டர் ராமதாஸ் முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது அங்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரண்டு நபர்களும்.

மேகதாது அணை நேர்மையான வழியில் அல்லது குறுக்கு வழியில் கட்டி தீருவோம் அதன்மூலம் பெங்களூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்வோம் என்று வெளிப்படையான ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் நிச்சயம் நாங்கள் மேகதாது அணை கட்டப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்படுகிறது இதற்கு சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இப்படி மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது ஆனால் இதை கண்டித்து தமிழக முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் ஒரு செய்தி கூட வெளியிடாமல் இருக்கிறார்.

காரணம் காங்கிரசை பகைத்துக் கொண்டால் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்ற சூழ்நிலை திமுகவிற்கு உள்ளது என்ற ஒரு அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

We will definitely build Meghadatu Dam across Cauvery
We will definitely build Meghadatu Dam across Cauvery

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகத்திற்கு கேடு

கடந்த வருடம் மே மாதம் 23 தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்றது அப்பொழுது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காங்கிரசை ஆதரித்து கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு அறிகுறிகள் என்ன..!

காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது உடனடியாக காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் மேகதாது  அணை கட்டிய தீருவோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இது போன்ற ஒரு அறிவிப்பு விவசாயிகளிடம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

இப்பொழுது கர்நாடக அரசு நிச்சயம் நாங்கள் அணை கட்டி தீருவோம் என்று உறுதியுடன் இருக்கிறார்கள் தமிழகத்தில் திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறது அப்பொழுதெல்லாம் காவேரி உரிமை பறிக்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் ஏன் மௌனம் காக்கிறார்

எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டசபையில் கர்நாடகா காங்கிரசை கண்டித்து தீர்மானம் கொண்டு வருகிறார்கள் ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக இது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என்று தமிழக விவசாயிகள் சங்கமம் கண்டனம் தெரிவிக்கிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment