செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 4 பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை விஜய் மற்றும் சீமான் நடத்துகிறார்கள்..!Vijay Seeman will hold 4 grand public meeting after September

Vijay Seeman will hold 4 grand public meeting after September

செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 4 பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை விஜய் மற்றும் சீமான் நடத்துகிறார்கள் அதனால் யாருக்கு பாதிப்பு..!

தற்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார் கட்சி தொடங்கியதும் கடுமையான எதிர்ப்பை திமுக மறைமுகமாக பதிவு செய்தது ஆனால் விஜய் தேர்தல் முடிந்து கடைசி படம் வெளியான பின்பு.

ஆட்சியைப் பற்றியும் நேரடியாக விமர்சனம் செய்கிறேன் என்று தெரிவித்தார் ஜூன் ஜூலைக்குள் அவருடைய கடைசி படமான வெங்கட் பிரபு இயக்கம் GOAT படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் முடிந்துவிடும்.

இந்த வருடம் தீபாவளிக்குள் படம் வெளியிடப்படும் அதன் பிறகு நடிகர் விஜய் எந்த படங்களிலும் நடிக்க மாட்டார் நேரடியாக அரசியலில் களம் இறங்குகிறார்.

நடிகர் விஜய் தெரிவித்த வாழ்த்துக்கள்

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு குறிப்பாக 4 நபர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார் இது எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் கட்சி 8.22% வாக்குகள் பெற்றதால் வாழ்த்து தெரிவித்தார் மேலும் விடுதலை சிறுத்தை கட்சி மாநில அந்தஸ்து பெற்றுள்ளதால் அதற்குள் அதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் இதற்குள் இருக்கும் மறைமுகமான கூட்டணி என்ன.

 2026 ஆம் ஆண்டு கூட்டணி நிலவரம் என்ன

தற்போது பாமக பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பாக பாமகவின் கோட்டையாக இருக்கும் தர்மபுரியில் திமுகவிடம் வெற்றியை பறிகொடுத்தது இதனால் மாநில அந்தஸ்து கட்சியை பாமக இழந்தது இதனை விசிக சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

மாற்றம் முன்னேற்றம் மாநில அந்தஸ்து இழந்த கட்சி என பாமகவை நோக்கி கடுமையான விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கிறார்கள் கடும் கோபம் உடன் இருக்கும் பாமக.

இதற்க்கு அனைத்திற்கும் காரணம் அண்ணாமலை செய்த செயல் மட்டுமே தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அனைத்து பேச்சு வார்த்தையும் முடிந்த பிறகு பாஜக அன்புமணி மீது இருக்கும் வழக்குகளை விசாரிக்க தொடங்கி விடுவார்கள் நிச்சயம் சிறைக்கு செல்வீர்கள் என்று மிரட்டி பாமக பாஜக கூட்டணி உறுதி செய்தது.

2026 ஆம் ஆண்டு கூட்டணி எப்படி இருக்கும்

2026 ஆம் ஆண்டு விசிக நிச்சயம் அமைச்சரவையில் இடம் கேட்கும் அதிக தொகுதிகள் கேட்கும் இதனை திமுக ஒருபோதும் ஒற்றுக்கொள்ளாது அதற்கு பதிலாக பாமகவை கூட்டணியில் திமுக இணைத்துவிடும்.

விசிக அதிமுக மற்றும் சில கட்சிகள் ஓர் அணியில் இருக்கும் தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் சீமான் விஜய கூட்டணி நேரடியாக எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு ஆதரவை கொடுத்து விடுவார்கள்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பயனாளர்கள் சேர்ப்பதற்கு பணிகள் நடைபெறுகிறது..!

சீமான் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யக்கூடிய நபர் ஆனால் அதிமுகவை சற்று மென்மையாக கையாள்வார் விஜயம் அப்படித்தான் உதயநிதி ஸ்டாலினால் விஜய் இப்பொழுது பாதிக்கப்பட்ட உள்ளார்.

அதிமு ஆட்சிக் காலத்தில் விஜயின் படங்கள் திரையிடுவதற்கு எந்த பாதிப்பும் இல்லை மேலும் விஜய் அதிமுக ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார் ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவருக்கு இடையூறும் அதிமுக அரசு செய்யவில்லை.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment