கருணாநிதி செய்த அதே தவறை உதயநிதி செய்கிறார் அரசியல் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறி..!Udayanidhi makes the same mistake as Karunanidhi

Udayanidhi makes the same mistake as Karunanidhi

கருணாநிதி செய்த அதே தவறை உதயநிதி செய்கிறார் அரசியல் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறி..!

கருணாநிதி முதல் உதயநிதி வரை செய்யும் ஒரே தவறு இதனால் புதிய எதிரிகள் உருவாகி விடுகிறார்கள் ஆட்சியை இழக்கிறது திமுக இது திமுகவிற்கு தொடர் கதை.

திமுகவை உருவாக்கிய அண்ணாவிற்கு பிறகு அந்தக் கட்சிக்கு தலைவராக வருவதற்கு பல அரசியல் நேர்மையான தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் கருணாநிதி எம்ஜிஆர்யிடம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில்.

எம்ஜிஆர் கருணாநிதியை முதலமைச்சராக்கினார் அதன்பிறகு எம்ஜிஆர் சினிமாவில் கவனம் செலுத்தினார் தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆருக்கு நன்கு வரவேற்பு இருந்தது இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி.

தன்னுடைய மூத்த மகனை சினிமாவில் நடிக்க வைத்து எம்ஜிஆரை வீழ்த்த வேண்டும் என முடிவு செய்தார் இந்த தகவல் எம்ஜிஆருக்கு தெரிய வரவே எம்ஜிஆர் தனியாக அதிமுகவை உருவாக்கினார் அதன் பிறகு கருணாநிதி திமுகவின் நிலைமை என்பது கேள்விக்குறி.

எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கிய பிறகு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார் 12 ஆண்டுகள் திமுகவால் கருணாநிதியால் வெற்றி பெற முடியவில்லை எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அணி ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது இதன் காரணமாக கருணாநிதி வெற்றி பெற்றார் ஆனால் அடுத்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.

அதன்பிறகு கருணாநிதி வெற்றி பெற்றார் அதன் பிறகு ஜெயலலிதா வெற்றி பெற்றார் 2006 முதல் 2011 வரை கருணாநிதி கொடுத்த ஒரு கேவலமான ஆட்சியை மக்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் மறுபடியும் 10 ஆண்டுகள் அதிமுகவிற்கு வாய்ப்பளித்தார்கள்.

தமிழகம் முன்னேற்றம் 2011 முதல் 2021 வரை

தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது தமிழகம் முழுவதும் கலை என்று அறிவியல் கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டது இந்த 10 ஆண்டுகள் தமிழகத்தின் பொன்னான ஆண்டுகள் என்று சொல்லலாம் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது.

ஆட்சி நன்றாக இருந்தது மழை பொழிவு நன்றாக இருந்தது மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள் ஆனால் மீடியாக்களை விளக்கி வாங்கிய திமுக சில ஆயிரம் பணத்தை கொடுத்து அதிமுகவிற்கு எதிராக பேச வைத்தார்கள் இதனை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

சவுக்கு சங்கர் போன்ற ஆட்கள் திமுகவை நோக்கி கேள்வி கேட்பது திமுகவிற்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது மேலும் 2026 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் களம் இறங்குவேன் என தெரிவித்தது திமுகவிற்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது.

சவுக்கு சங்கர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக களத்தில் மோதினால் சவுக்கு சங்கருக்கு தமிழக முழுவதும் இருந்து ஆதரவுகள் கிடைக்கும் குறிப்பாக இளைஞர்கள் சவுக்கு சங்கருக்கு பணி செய்வதற்கு நேரடியாக களத்தில் இறங்கி விடுவார்கள் இதனால் நிச்சயம் உதயநிதி தோல்வி என்பது உறுதி.

சவுக்கு சங்கரை வெளியில் விட்டு வைத்தால் திமுக ஆட்சியை பறிபோய்விடும் என்பதை உணர்ந்து கொண்ட திமுக அவரை முடக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டது.

அவருடைய நண்பர்களுக்கு உறவினர்களுக்கு உடன் வேலை செய்யும் நபர்களை குறி வைத்து போலி வழக்குகள் போடப்பட்டு சவுக்கு சங்கருக்கு உளவியல் ரீதியாக பல்வேறு டார்ச்சல்கள் கொடுக்கப்பட்டு அவரை தவறாக பேச வைத்து தற்போது கைது செய்துள்ளார்கள்.

Udayanidhi makes the same mistake as Karunanidhi
Udayanidhi makes the same mistake as Karunanidhi

செந்தில் பாலாஜி சிறை செல்ல சவுக்கு சங்கர் முக்கிய காரணம்

கடந்த முறை சவுக்கு சங்கரை கடலூர் சிறையில் கொடுமைப்படுத்தினார்கள் என்று சவுக்கு சங்கர் தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்தார் அதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி என தெரிவித்தார்.

சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு செந்தில் பாலாஜி மறைமுகமாக கட்டி வந்த வீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் அதன் பிறகு செந்தில் பாலாஜிக்கு கேட்ட நேரம் தொடங்கிவிட்டது.

குறிப்பாக செந்தில் பாலாஜி கட்டும் வீட்டின் நிலம் எப்படி பதிவு செய்யப்பட்டது, அந்த நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு ரூபாய்க்கு பத்திரம் பதியப்பட்டுள்ளது என்பதை பற்றி முழு தகவலை வெளியிட்டார்.

இதனால் செந்தில் பாலாஜி நன்றாக சிக்கிக் கொண்டார் தற்போது 12 மாதங்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதற்கு சவுக்கு சங்கர் மிக முக்கிய காரணம் இந்த முறை சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியில் வந்தால் மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கி விடுவார்.

சுக்கிரன் முதல் கார்த்திகை நட்சத்திரம் வரை வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உயரும் ராசிகள் பட்டியல்கள்..!

ஏனென்றால் அவருடன் பணி செய்யும் நபர்களுக்கும் திமுக தொடர்ந்து டார்ச்சல்களை கொடுத்து வருகிறது இதனால் உச்சகட்ட கோபத்தில் திமுக மீது பலர் உள்ளார்கள் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அமைப்பை உருவாக்குவார்.

அதற்கு கொடி சின்னம் போன்றவற்றை உருவாக்கி விட்டு அதிமுக, நாம் தமிழர் கட்சி, அண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு நபர்களுடன் கைகோர்த்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்கினால் திமுகவின் நிலைமை கேள்விக்குறி.

அதுவும் சவுக்கு சங்கர் உதயநிதியை நோக்கி களம் இறங்குவார் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு திமுகவிற்கும் சவுக்கு சங்கிற்கும் மிகப்பெரிய யுத்த களமாக இருக்கும் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment