இன்று டிஎன்பிஎஸ்சி பல்வேறு துறைகளில் மெகா வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது..!TNPSC has announced mega recruitment in various fields

TNPSC has announced mega recruitment in various fields

இன்று டிஎன்பிஎஸ்சி பல்வேறு துறைகளில் மெகா வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இன்று ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்கள் அதற்கு கல்வி தகுதி, வயது வரம்பு, உள்ளிட்ட தகவல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது தேர்வுக்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் இது பற்றி முழு தகவல்களையும் கவனமாக நன்கு படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விருப்பம் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் விதிமுறை மீறி செயல்படும் தேர்வாளர்களை இந்த நிலையிலும் நிராகரிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உரிமை உள்ளது.

தேர்வுக்கான அறிக்கை வெளியான தேதி 15.05.2024

இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2024

விண்ணப்பங்களை திருத்த செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் ஏதாவது தவறு இருந்தால் 19.06.2024 அதிகாலை முதல் 21.06.2024 11:59PM  வரை விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்ய முடியும்.

பொது அறிவு, திறன், மன திறன், சோதனை மற்றும் தமிழ் மொழி தேர்வு ஜூலை 28ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும்.

திமுகவின் மூன்று ஆண்டு ஆட்சியில் தமிழக மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் என்ன..!

கணிதம். அக்கவுண்ட்,பொது நிர்வாகம், ஆங்கிலம், தமிழ், நிர்வாக மேலாண்மை, சட்டம், பொருளாதார, பிரிவுகளுக்கான தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்று விடுமுறை.

இந்தப் பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாக 118 பணியிடங்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளது தகுதி மற்றும் முழு விவரங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment