நாடாளுமன்றத் தேர்தலால் தமிழகத்தில் விவசாயம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..!There is a shortage of labor for agriculture and construction in TN

There is a shortage of labor for agriculture and construction in TN

நாடாளுமன்றத் தேர்தலால் தமிழகத்தில் விவசாயம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..!

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயம், கட்டுமானம் மற்றும் பிற துறைகளுக்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது முக்கியமாக பெண்கள் செய்யக்கூடிய வேலைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என முதலாளிகள் தெரிவிக்கிறார்கள்.

தேர்தலுக்கு அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களை வரவேற்று ஆர்த்தி எடுத்தால் 500 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது அரசியல் கட்சிகளால் மற்றும் முக்கியமான தலைவர்கள் வரும்பொழுது.

கூட்டத்தைக் கூட்டுவதற்கு அந்தக் கட்சியை சார்ந்த நபர்கள் பெண்களை வாகனங்களில் அழைத்து செல்கிறார்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை பணம் வழங்கப்படுகிறது.

இந்த காரணங்களால் இந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பெண்கள் செய்யக்கூடிய வேலைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சிறு குறு முதலாளிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் கடுமையான வெயில் வாட்டி வருவதால் கட்டுமான பணிகளுக்கு பெண்கள் பற்றாக்குறை நிலவுகிறது என அதனை சார்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

There is a shortage of labor for agriculture and construction in TN
There is a shortage of labor for agriculture and construction in TN

விவசாயம் மற்றும் கட்டுமான பணிகள் 

தேர்தல் நடைமுறை நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் பணம் எந்த ஒரு ஆதாரம் இன்றி எடுத்துச் செல்வதற்கு அனுமதி.

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் நிச்சயம் அதற்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த காரணங்களால் விவசாய பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது, மேலும் வேலையாட்களுக்கு சரியான நேரத்தில் பணம் வழங்க முடியவில்லை.

இந்த காரணங்களால் வேலையாட்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்று விடுகிறார்கள் என விவசாயம் செய்யும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்.

கிராமங்கள், பேரூராட்சி, நகர்ப்புறங்களில், வீடு கட்டும் நபர்கள் நீண்ட நாட்களாக சேமித்து வைத்த பணத்தை பயன்படுத்துவார்கள் அல்லது நண்பர்கள் உறவினர்களிடம் பணம் வாங்கி கட்டுமான பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை சில நேரங்களில் இருக்கும்.

சேமிப்பு, விவசாயத்தில் சம்பாதித்த பணம், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கடன் வாங்கிய பணத்திற்கு ஆதாரத்தை காண்பிக்க முடியாது.

இதுபோன்ற பணத்தை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்று பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை இருப்பதால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

உதயநிதியின் சிறு தவறால் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிக்கிக்கொண்டு..!

அரசியல் கட்சிகள் பெண்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தால் 600 ரூபாய், உணவு, பரிசு பொருட்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்து அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இதனால் எங்களுக்கு பெண்கள் செய்யக்கூடிய வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதுவும் ஒரு காரணம் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட என கட்டுமான நிறுவனங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment