அண்ணாமலையை ஏற்றுக் கொள்வீர்களா என்று தமிழக இளைஞர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு..!Survey conducted among the youth of TN about Annamalai

Survey conducted among the youth of TN about Annamalai

அண்ணாமலையை ஏற்றுக் கொள்வீர்களா என்று தமிழக இளைஞர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு..!

தமிழக இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை 65 சதவீத இளைஞர்கள் வரவேற்கிறார்கள் காரணம் இவர் நன்கு படித்தவர் முன்னாள் காவல்துறை அதிகாரி இவருடைய பேச்சுக்கள் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக இளைஞர்களிடம் ஊழல் இல்லாத நேர்மையான அரசாங்கம் வேண்டும் என்ற ஒருமித்த கருத்து உள்ளது,இளைஞர்களின் முதல் எதிர்பார்ப்பு படித்த நேர்மையான நபர் ஆட்சி நடத்தினால்.

வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, காடுகள் பாதுகாப்பு, அரசாங்க பள்ளிகளின் தரம் உயர்த்துதல், அரசாங்கம் மருத்துவமனை தரம் உயர்த்துதல், போன்ற கருத்துக்கள் இருக்கிறது.

அண்ணாமலை திமுக, அதிமுக, ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை பற்றி புள்ளி விவரங்களுடன் செய்திகளை வெளியிடுவதால் இளைஞர்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியபோது ஊழல் புகாரில் சிக்கவில்லை இது முதன்மை காரணமாக இருக்கிறது இளைஞர்களிடம் அண்ணாமலைக்கு செல்வாக்கு உயர்வதற்கு.

தமிழக முழுவதும் நடத்திய கருத்துக்கணிப்பு

தமிழக முழுவதும் 234 தொகுதிகளிலும் (AIRNEWSTAMIL24.IN) இணையதளம் சார்பில் நடத்திய கருத்துக்கணிப்பில் 80 ஆயிரம் சாம்பில்கள் பெறப்பட்டது, அதில் அண்ணாமலை பற்றிய சில தகவல்களை இங்கு காணலாம்.

தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை ஒருவேளை வரும் காலத்தில் பொறுப்பேற்றால் அண்ணாமலை நேர்மையான அதிகாரியாக இருப்பாரா என்ற கேள்விக்கு 70 சதவீத இளைஞர்கள் ஆம் என்று பதிலளித்துள்ளார்கள்.

அண்ணாமலை வெளியிடும் கருத்துக்கள் உண்மையானவையா என்ற கேள்விக்கு சில கருத்துக்கள் உண்மையானதாக இருக்கிறது சில கருத்துக்கள் தமிழகத்தில் விவாதங்களை ஏற்படுத்துகிறது,அண்ணாமலை மறைந்த முதல்வர்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் அவ்வாறு அவர் மறைந்த முதல்வர்களை பற்றி தொடர்ந்து பேசி வந்தால் அது அவருக்கு எதிராக திரும்பி விடும் என்று  கிட்டத்தட்ட 80 சதவீதம் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

அண்ணாமலைக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு 20 முதல் 35 வயது உள்ள 60 சதவீத இளைஞர்கள் நாங்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க விரும்புகிறோம்,தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடைபெற்றால் மட்டுமே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு இளைஞர்கள் சிரிப்பான பதிலை வழங்கியுள்ளார்கள் அதாவது அண்ணாமலை நேரடியாக திமுகவின் விளையாட்டு துறை அமைச்சரை விமர்சனம் செய்வதால் திமுக கட்சி உச்சகட்ட கோபத்தில் அண்ணாமலை மீது உள்ளது, அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று இளைஞர்களும் பதில் அளித்துள்ளார்கள்.

உதயநிதி ஸ்டாலினும் அண்ணாமலையும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 55 சதவீத இளைஞர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க விரும்புகிறோம் என பதிலளித்துள்ளார்கள், காரணம் அண்ணாமலை கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய போது நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றுள்ளார், எங்களுக்கு நேர்மையான தலைவர் தேவை என்று இளைஞர்கள் பதில் அளித்துள்ளார்கள்.

அண்ணாமலை சீமான் உதயநிதி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள், இதில் யாருடைய கருத்துக்கள் உங்களை கவர்ந்துள்ளது என்ற கேள்விக்கு 52 சதவீத இளைஞர்கள் அண்ணாமலை என்ற பதிலை வழங்கியுள்ளார்கள்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4 இளம் தலைவர்கள் தேர்தலில் களம் இறங்கினால் அதில் உங்களுடைய வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு 57  சதவீத இளைஞர்கள் முதலில் அண்ணாமலைக்கு, இரண்டாவதாக சீமானுக்கு, மூன்றாவதாக விஜய்க்கு, நான்காவது உதயநிதி என்று பதில் அளித்துள்ளார்கள்.

Survey conducted among the youth of TN about Annamalai
Survey conducted among the youth of TN about Annamalai

தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன

தமிழகத்தில் 20 முதல் 35 வரை உள்ள இளைஞர்கள் 90 சதவீதம் எங்களுக்கு நேர்மையான தலைவர் தேவை என்ற கருத்தை பதிவு செய்கிறார்கள் அதில் அண்ணாமலை முதலிடத்தில் உள்ளார், சீமான் 2 இடத்தில் உள்ளார், விஜய் முதலில் தேர்தலில் களம் இறங்கட்டும் அவர் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்கிறார் என்பதை பொறுத்து அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் என்று இளைஞர்கள் கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

திமுக விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று அந்தக் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உதயநிதி பற்றி இளைஞர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் அவருக்கு போதிய வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது, காரணம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக செயல்படுத்தாததால் தமிழக மக்களிடம் மற்றும் இளைஞர்களிடம் கோபம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச மடிக்கணினி திட்டம், குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வழங்கும் 18 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு மாடு வழங்கும் திட்டம், படித்த பெண்கள் திருமணம் செய்யும் போது வழங்கும் தாலிக்கு தங்கம் திட்டம், போன்றவைகளை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிறுத்திவிட்டது இதனால் இளைஞர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் திமுக அரசின் மீது கோபம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திமுக ஆட்சியில் பெயரளவில் செயல்படுத்தப்படுகிறது, அதனுடைய தரம் குறைந்துவிட்டது, பல்வேறு அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளது என்று இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் மற்றும் வெப்பநிலை அதிகரித்தது..!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட படித்த இளைஞர்கள் அதிகமாக சென்னையில் பணிபுரிகிறார்கள் மற்றும் வேலைவாய்ப்பிற்கு சென்னைக்கு வருகிறார்கள் இது போன்ற நேரங்களில் அம்மா உணவாக மூலம் ஒரு நாளைக்கு 20 ரூபாய் செலவு செய்து 3 வேலை உணவு சாப்பிட்டு வருவோம் தற்போது அம்மா உணவகம் சரியாக நடத்தப்படுவதில்லை என்ற கோபம் இளைஞர்களிடம் இருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பின் மூலம் திரு உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்களிடம் போதிய வரவேற்பு இல்லை,2026 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டால் நிச்சயம் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார் என்று இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment