உங்களைக் கவர்ந்த இந்த 3 தலைவர்களில் உங்களுடைய வாக்கு யாருக்கு..!Seeman Annamalai Udayanidhi is more popular among the people

Seeman Annamalai Udayanidhi is more popular among the people

உங்களைக் கவர்ந்த இந்த 3 தலைவர்களில் உங்களுடைய வாக்கு யாருக்கு..!

தற்போது தமிழகத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி குற்றங்களை சுமத்தி வருகிறார்கள்.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் திமுக உடனடியாக பிரச்சாரங்களில் இறங்கியது அதிமுக பிரச்சாரத்தை தொடங்குவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

அதிமுக பிரச்சாரத்தில் முந்திவிட்டது அதிமுகவின் பிரச்சாரம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் திமுக ஆட்சியின் 3 ஆண்டுகால நிலைமைகளை புள்ளி விவரங்களுடன் தெரிவிப்பதால்.

திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது தற்போது தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக 3 இளம் அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களில் யாருக்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பு உள்ளது என்பதை கருத்துக்கணிப்பு மூலம் நாம் தெரிந்து கொண்டு உள்ளோம், அதைப்பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

2010 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் சீமான் அவர்கள் இந்த கட்சியை அறிவித்து ஒருங்கிணைப்பாளராக இந்த கட்சியை தொடங்கினார்.

தொடர்ந்து இந்த கட்சி அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது தொடக்க காலத்தில் இந்த கட்சிக்குரிய வரவேற்பு இல்லை ஆனால் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தக் கட்சிக்கு இளைஞர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

நாம் தமிழர் கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்று தமிழகத்தில் 3வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 170 க்கு அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

தற்போது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது அதில் 20 இடங்களில் ஆண்கள் 20 இடங்களில் பெண்கள் என சரி பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியமாக மற்றும் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக மாறிவிட்டார், இவருக்கு செல்லும் இடமெல்லாம் இளைஞர்களின் கூட்டம் கூடுகிறது இவருடைய பேச்சு இளைஞர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

நாம் தமிழர் கட்சியில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள் வேட்பாளர்களாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல் பட்டதாரிகள், போன்றவர்கள் இருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக முழுவதும் தற்போது சூறாவளி பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றி அரசியல் தலைவர்கள் கட்டாயம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் அண்ணாமலை தொல் திருமாவளவன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் நாம் தமிழர் கட்சியை பற்றி குற்றம் சுமத்துகிறார்கள்.

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சிக்கு முன்பை விட தற்போது வாக்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கும் பிஜேபி கட்சிக்கும் போட்டி நிலவுகிறது என்ற ஒரு கருத்து தற்போது தமிழகத்தில் நிலவுகிறது இதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்களின் கூட்டம் கூடுகிறது, புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்கள் இவருக்கு அதிக வரவேற்பை கொடுக்கிறார்கள்.

Seeman Annamalai Udayanidhi is more popular among the people
Seeman Annamalai Udayanidhi is more popular among the people

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவர் முன்னாள் காவல்துறை அதிகாரி தற்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார் இவருக்கும் இளைஞர்களிடம் வரவேற்பு உள்ளது இவர் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது கர்நாடகாவில் மக்களிடத்தில் நற்பெயர் பெற்றவர்.

தற்போது தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உள்ளார் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவிற்கு மிகப்பெரிய குடைச்சல் கொடுக்கும் அரசியல் தலைவராக வலம் வருகிறார், இவருக்கு குறிப்பாக படித்த இளைஞர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

அண்ணாமலை அவர்களும் துல்லியமான தகவல்களை வெளியிடுகிறார் ஆனால் சில நேரங்களில் அந்த தகவல்கள் தமிழகத்தில் பேசும் பொருளாகவும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கிறது அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவை.

இவர் அரசியலுக்கு வந்து இன்னும் முழுமையாக 5 வருடங்கள் கூட நிறைவு பெறவில்லை இவர் அரசியலில் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் இவரை பற்றிய கருத்துக்கள் வெளி வருகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தற்போது தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராகவும் திமுகவின் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு மக்களின் செல்வாக்கு இருக்கிறது ஆனால் இவருடைய பேச்சுக்களும் அவ்வப்போது கேலி கிண்டல்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவர் தற்போது செய்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது, இவர் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும்போது இவரை நோக்கி கூட்டத்தில் இருந்த ஒருவர் எப்பொழுது மது கடைகளை மூடுவீர்கள் என்று கேள்வி கேட்டார்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக தலைவர் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவிற்கு வாக்களித்தால் மதுக்கடையில் மூடுவதாக தெரிவித்தார் ஆனால் நீங்கள் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை அதிமுகவிற்கு வாக்களித்தீர்கள் என்று பதில் அளித்தார்.

இந்த பதில் அங்கிருந்த மக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியது, மேலும் இவர் பேசிய இந்த வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தமிழக முழுவதும் அன்றைக்கு ட்ரெண்டிங் செய்யப்பட்டது.

தமிழகத்தில் திடீர் என்று தண்ணீர் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது..!

திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2021 ஆம் ஆண்டு முதன் முதலில் தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற்று அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அமைச்சராக பதவி ஏற்றார் இவர் திமுகவின் அடுத்த தவிர்க்க முடியாத தலைவராக இருக்கிறார்.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் இவர் திமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குவார் என திமுகவின் உடன் பிறப்புகள் தெரிவிக்கிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment