கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் காவல்துறை அழைத்த போது நிருபர்களை பார்த்து சொன்ன சவுக்கு சங்கர்..!Savukku Shankar was brought to Coimbatore Govt Hospital today

Savukku Shankar was brought to Coimbatore Govt Hospital today

கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் காவல்துறை அழைத்த போது நிருபர்களை பார்த்து சொன்ன சவுக்கு சங்கர்..!

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல youtube சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

அப்போது நான் கோவை சிறையில் கொல்லப்படுவேன் என நிருபர்களை பார்த்து முழக்கமிட்டார் தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஆபாசமாக பேசிய வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு அவர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேனியில் கடந்த 4ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு கைது செய்தார்கள் அவர் மீது மேலும் கஞ்சா வழக்கு உட்பட 7 வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்த புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது இந்த நிலையில் சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த போது 10க்கு மேற்பட்ட காவல்துறை சேர்ந்து அவரை இருட்டு அறையில் அடித்ததால்.

அவருடைய கை உடைந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார் எனக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அதற்கு நீதிமன்றம் நிச்சயம் உங்களுக்கு சிகிச்சை வழங்க முடியும் வழங்குகிறோம் என தெரிவித்தது.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரை இன்று மருத்துவ பரிசோதனைக்காக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தார்கள்.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வலது கையில் மீண்டும் கட்டு போடப்பட்டது தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்து சென்றார்கள்.

youtube மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்..!

அப்போது காவல்துறை சுற்றி இருக்கும்போது பத்திரிக்கை நிருபர்களை பார்த்து சவுக்கு சங்கர் கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என்னுடைய கையை உடைத்தார் கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.

கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என முழுங்கினார் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனால் அவரை காவல்துறை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment