சவுக்கு சங்கர் வழக்கில் வேகம் குறைகிறது சவுக்கு சங்கர் வெளியில் வருவதற்கு அறிகுறிகள் தெரிகிறது..!Savukku Shankar remanded to two more days of court custody

Savukku Shankar remanded to two more days of court custody

சவுக்கு சங்கர் வழக்கில் வேகம் குறைகிறது சவுக்கு சங்கர் வெளியில் வருவதற்கு அறிகுறிகள் தெரிகிறது..!

காவல்துறை அதிகாரிகளை ஆபாசமாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் அதன் பிறகு தொடர்ச்சியாக அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் கஞ்சா வழக்கம் அடங்கியுள்ளது.

இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார் அப்போது நீதிபதி சவுக்கு சங்கரிடம் கேட்ட கேள்வி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது முதலில் சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

அங்கு நீதிபதி சவுக்கு சங்கருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் அவரையும் ஆஜர்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார் உடனடியாக அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழு உடல் பரிசோதனை செய்து.

அந்த அறிக்கையும் சவுக்கு சங்கரையும் மதியம் நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் அப்பொழுது காவல்துறை சார்பில் 7 நாள் விசாரணைக்கு வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.

ஆனால் நீதிபதி சவுக்கு சங்கரை பார்த்து நீங்கள் காவல்துறை விசாரணைக்கு செல்ல விருப்பப்படுகிறீர்களா என்று கேள்வி கேட்டார் அதற்கு சங்கர் எனக்கு எந்த ஆட்சேபனம் இல்லை நான் விசாரணைக்கு முழு ஒத்துழைக்கிறேன் என தெரிவித்தார்.

உடனடியாக நீதிபதி இரண்டு நாட்கள் விசாரணைக்கு அனுமதி வழங்கினார் மேலும் அவர் எப்படி ஆரோக்கியமாக செல்கிறாரோ அதே மாதிரி மறுபடியும் 22ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அந்த அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன் பிறகு தேனி மாவட்ட காவல் துறை சவுக்கு சங்கரை இரண்டு நாள் காவல் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் தற்போது சவுக்கு சங்கர் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் நீதிபதிகள் முதலில் சவுக்கு சங்கரை முழு உடல் பரிசோதனை செய்யுங்கள்.

இந்த வாரம் 12 ராசிகளுக்கான நிதி நிலைமை எப்படி இருக்கும்..!

அந்த அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் காவல் விசாரணை முடியும் போதும் மருத்துவமனையில் அனுமதித்து அந்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறார்கள் ஏனென்றால் சவுக்கு சங்கர் உயிருக்கு எந்த ஆபத்து இருக்க கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது.

22 ஆம் தேதி சவுக்கு சங்கர் வழக்கில் காவல் நாள் முடிவடைகிறது அதன் பிறகு அவருக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது காவல் நாள் நீடிக்கப்படுமா என்பது 22 ஆம் தேதி மதியம் தெரியவரும்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment