திடீரென்று இன்று தமிழ்நாடு முழுவதும் மோடி புகைப்படத்துடன் கூடிய ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அந்த போஸ்டரில் QR Code இடம் பெற்றுள்ளது..!QR code poster with Modi photo are plastered all over tn

QR code poster with Modi photo are plastered all over tn

திடீரென்று இன்று தமிழ்நாடு முழுவதும் மோடி புகைப்படத்துடன் கூடிய ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அந்த போஸ்டரில் QR Code இடம் பெற்றுள்ளது.

இந்த QR Codeடை உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்தால் ஒரு நிமிடம் 30 வினாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ தோன்றுகிறது அந்த வீடியோவில் கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் என்னென்ன நடந்தது என்பதை பற்றி சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பாஜக ஆட்சியில் சில ஊழல்கள் நடந்துள்ளது என்று அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகவும், சுங்கச்சாவடி முறைகேடு, தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் 15 லட்சம் வரவு வைக்கப்படும், என இப்படி பல்வேறு தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

கர்நாடகா காங்கிரஸ் பின்பற்றிய ஐடியாவை தற்போது திமுக தமிழகத்தில் பின்பற்றியுள்ளது கடந்த ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது அப்பொழுது கர்நாடகா காங்கிரஸ் PAY CM என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ள OQ Codeடை ஸ்கேன் செய்தால் போதும் அதில் வீடியோ ஒளிபரப்பு செய்யப்படும் அந்த வீடியோவில் ஆளும் அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும், அது போன்ற ஒரு தேர்தல் யுக்தி தற்போது திமுக அரசால் தமிழ்நாடு முழுவதும் செய்யப்படுகிறது.

QR code poster with Modi photo are plastered all over tn
QR code poster with Modi photo are plastered all over tn

தற்போது தமிழகத்தில் தீவிர பிரச்சாரம்

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள் அதிமுக புதுமையான யுத்திகளை கடைப்பிடித்து தேர்தல் பிரச்சாரத்தை செய்கிறது இது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

குறிப்பாக வீடியோ போட்டு காண்பித்து கேள்வி கேட்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் நல்ல பலனை கொடுத்துள்ளது.

கரூரில் ஒன்று சேர்ந்து பிபி ஊதி ஜோதி மணியை விரட்டியடித்த இளைஞர்கள்..!

நாம் தமிழர் கட்சியும் இளைஞர்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை செய்கிறது தற்போது திமுகவில் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது கூட்டணி கட்சிகளுடன் சில பிரச்சனைகளில் திமுகவின் முக்கிய தலைவர்கள் உள்ளார்கள்.

அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு நேரடியான ஆதரவு வழங்காமல் அதிமுக போன்ற கட்சி வேட்பாளர்களுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குகிறார்கள் என கூட்டணி கட்சிகள் தங்களுடைய குமுரலை தெரிவிக்கிறார்கள்.

ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிய வரும் அப்பொழுதுதான் எந்த கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்பதை தமிழகத்தில் கணிக்க முடியும்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment