விருதுநகரில் பெண் டிஎஸ்பிஐ தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்..!Police have arrested a man who assaulted a female DSP in Virudhunagar

Police have arrested a man who assaulted a female DSP in Virudhunagar

விருதுநகரில் பெண் டிஎஸ்பிஐ தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்..!

விருதுநகர் அருகே சரக்கு வாகன ஓட்டுனர் கொலையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பிஐ போராட்டத்திலிருந்து சில இளைஞர்கள் தாக்கினார்கள் அவருடைய தலை முடியை பிடித்து இழுத்து.

ஆபாசமான வார்த்தையில் திட்டினார்கள் மேலும் அங்கு இருந்த காவல்துறையினரையும் போராட்டக்காரர்கள் ஒன்று சூழ்ந்து தாக்குதல் நடத்தினார்கள் சுதாரித்துக் கொண்ட காவல் துறை மேலும் காவலாளர்களை அந்த இடத்திற்கு வரவழைத்தது.

அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென அவரது நண்பர்கள், உறவினர்கள், அவருடன் பணிபுரிய நபர்கள் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதனை தடுப்பதற்கு அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார் அப்போது மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை ஆபாசமான வார்த்தையில் பேசியுள்ளார் மேலும் தாக்க தொடங்கியுள்ளார்.

இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது அவருடன் சேர்ந்து சில நபர்கள் டிஎஸ்பி காயத்திரி மற்றும் அங்கு இருந்த காவலாளர்களை தாக்கினார்கள் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவலாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் மற்றவர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என எதிர்க்கட்சி அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள் திமுக மீது.

தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்த காவல்துறை

இந்த நிலையில் பெண் டிஎஸ்பி தலை முடியை பிடித்து இழுத்ததாக முதலில் காளீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 116 நபர்களின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளியான காளீஸ்வரனை கைது செய்ய சென்றபோது அவர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததாகவும் அப்போது அவர் கீழே விழுந்து.

திருச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு மூணு நாள் நீதிமன்ற காவல்..!

கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது இதன்பிறகு அவரை மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறை மாவு கட்டு போட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தப் போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் நெல்லிக்குளம் பாலமுருகன், காளிமுத்து, ஜெயக்குமார், சஞ்சய் குமார், பாலாஜி, பொன் முருகன், சூர்யா, ஆகிய ஏழு நபர்களை கைது செய்துள்ளார்கள் டிஎஸ்பி தாக்கி விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல், கூட்டு சதி, உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment