திருச்சியில் ஜேபி நாட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!Police denied permission to JP Nattawin vehicle rally in Trichy

Police denied permission to JP Nattawin vehicle rally in Trichy

திருச்சியில் ஜேபி நாட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தலைவர்கள் தீவிரமாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளாக இருக்கும் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் தற்போது தமிழகத்தில் தேர்தல் போக்கு அதிமுக திமுக என்று மாறிவிட்டது.

தமிழகத்தில் தேசிய கட்சிகளால் கூட்டணி இல்லாமல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது, இதன் காரணமாக தேசிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு வந்து குறிப்பிட்ட தொகுதிகளில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள்.

Police denied permission to JP Nattawin vehicle rally in Trichy
Police denied permission to JP Nattawin vehicle rally in Trichy

ஜே பி நாட்டாவிற்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்றி விட வேண்டும் இந்த தேர்தலில் குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று சில தொகுதிகளில் தீவிரமான பிரச்சாரத்தில் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி 18.03.2023 அன்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு ரோடு ஷோ நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அண்ணாமலை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்..!

தற்போது திருச்சியில் நாளை நடைபெற இருந்த பாஜக தலைவர் ஜே பி நாட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறையினர் தற்போது அனுமதி மறுத்துள்ளார்கள்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ஜெபி நாட்டாவின் வாகன பேரணி நடைபெறுவதாக திட்டமிட்டு இருந்தது, பாஜக சார்பில் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் ஜே பி நாட்டாவின்.

வாகன பேரணிக்கு காவல்துறையினர் திடீரென்று அனுமதி மறுத்துள்ளார்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதி என்பதால் அனுமதி மறுப்பு.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment