தன்னுடைய குடும்ப உறுப்பினர் வெற்றி பெற வேண்டும்! நன்றாக இருக்க வேண்டும்…மற்றவர்கள் எப்படி இருந்தால் எனக்கு என்ன அன்புமணி ராமதாஸ் கொள்கை..!PMK is dangerously transporting people to election campaign

PMK is dangerously transporting people to election campaign

தன்னுடைய குடும்ப உறுப்பினர் வெற்றி பெற வேண்டும்! நன்றாக இருக்க வேண்டும்…மற்றவர்கள் எப்படி இருந்தால் எனக்கு என்ன அன்புமணி ராமதாஸ் கொள்கை..!

தேர்தல் என்று வந்தால் மட்டுமே மக்களை எட்டி பார்க்கும் அரசியல் தலைவர்கள் இந்த நிலைமை எப்பொழுது நம் நாட்டில் நீங்கும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

அனைத்து கட்சிகளும் கடுமையான வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை பிரம்மாண்ட மேடை அமைத்து மக்களை அழைத்து வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள்.

தற்போது இதே ஐடியாவை பாஜகவும் பின்பற்றுகிறது 03.04.2024 தர்மபுரியில் பாமக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் அழைத்து செல்கிறார்கள்.

மக்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள்

தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் இங்கு தொழிற்சாலைகள் இல்லை விவசாயம் மட்டுமே இருக்கிறது அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே.

பெரும்பாலான இளைஞர்கள் பெங்களூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட நகரங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபடுகிறார்கள்,படித்த இளைஞர்கள் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

இங்கு விவசாயம் பிரத்தியேகமான தொழில் அப்படி இருக்கும் சூழ்நிலையில் இங்கு சாதி சம்பந்தமான பிரச்சனைகளை தூண்டிவிட்டு அதன் மூலம் பயன் பெறுகிறது ஒரே குடும்பம் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி.

03.04.2024 மாலை 7 மணிக்கு மேல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேடையில் பேசிய பேச்சு மிகுந்த சுயநலமாக தெரிகிறது அதாவது பிரச்சனை என்றால் பத்திரகாளியாக மாறிவிடுவார் சௌமியா.

பெண்களுக்கு பிரச்சனை என்றால் சௌமியா பத்திரகாளியாக மாறிவிடுவார் பெண்களுக்காக சௌமியா நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டார்,மக்களுக்காக ஐநா மன்றத்தில் குரல் கொடுத்த சௌமியா நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க மாட்டாரா? தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு பரப்புரை ஆற்றினார்.

பாமக கட்சியில் அவருடைய மனைவி மட்டுமே சிறப்பாக செயல்படுகிறாரா? அவரை தவிர வேறு பெண்கள் இல்லையா? படித்த பெண்கள் இல்லையா? சுயநலத்திற்காக தர்மபுரி மாவட்டத்தில் அதிகமாக.

ஜாதி வெறியை ஏற்படுத்தி வெற்றி பெற்று வருகிறது பாமக இது போன்ற சுயநலவாதி அரசியல்வாதிகளை எப்பொழுது மக்கள் விரட்டி அடிக்கிறார்களோ அப்பொழுது மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

PMK is dangerously transporting people to election campaign
PMK is dangerously transporting people to election campaign

தன்னுடைய மனைவியை பற்றி புகழ்ந்து பேசும் அன்புமணி இது பற்றி சிந்திக்க வேண்டும்

03.04.2024 அன்று பாமக இரவு 7 மணிக்குமேல் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு மாலை நேரத்தில் சரக்கு வாகனங்களில் பெண்களையும் பொது மக்களையும் ஆபத்தான முறையில் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் கொடுத்து அழைத்துச் சென்றார்கள்.

இளைஞர்களிடம் சாதி சம்பந்தமான கொடி, டீ-சர்ட், வேஷ்டி, உள்ளிட்டவைகளை கொடுத்து கூடவே மதுபானம் கொடுத்து பாமக நடத்திய பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

மது போதையில் சாதி வெறியுடன் அதிவேகமாக 2 சக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள் இதற்கு யார் பதில் சொல்ல முடியும்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர் தன்னுடைய மனைவியை வேட்பாளராக களம் இறக்கி உள்ளார், பாமக கட்சியில் இவரை தவிர வேறு பெண்கள் அல்லது படித்த இளைஞர்கள் தர்மபுரி மாவட்டத்தில் இல்லையா.

குடும்ப அரசியலை பாமக செய்து வருகிறது இந்த பின்தங்கிய மாவட்டத்தில் தொடர்ந்து சாதி சம்பந்தமான பிரச்சனைகளை தூண்டி விட்டுக் கொண்டே ஒவ்வொரு தேர்தலிலும் அதை மையப்படுத்தி வெற்றி பெற்று வருகிறது பாமக.

தன்னுடைய மனைவியைப் பற்றி புகழ்ந்து பேசும் அன்புமணி ராமதாஸ் இந்த ஏழை எளிய மாவட்டத்தில் 200 ரூபாய் பணத்திற்கு ஆபத்தான முறையில் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரும் பெண்களின் நலனையும் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த பின்தங்கிய மாவட்டத்திற்கு கல்வி, தொழில் வளர்ச்சி, நிலத்தடி நீர்மட்டம், விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, போன்றவற்றைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இந்த தர்மபுரி மாவட்டத்தில் திருவிழா நடந்தால் அங்கு தன்னுடைய சாதி சம்பந்தமான கொடிகள், டீசர்ட்டுகள், போன்றவை இருப்பதை பார்த்துக் கொள்ளும் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களின் நலனையும் பற்றி சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைக்கும் கட்சியிடம் குறிப்பிட்ட தொகை பணம் பெற்றுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மக்களின் நலனையும் பற்றி சிந்திக்க வேண்டும்.

வேகமாக முன்னேறும் அதிமுக தமிழகத்தில்..!

தர்மபுரி மாவட்டம் பாமக கோட்டை என்று சொல்லிக் கொள்ளும் அன்புமணி ராமதாஸ், இந்த மாவட்டம் வளர்ச்சி அடைவதற்கு இதுவரை என்ன பங்களிப்பு செய்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் காட்டமான கேள்விகள் எழுப்பப்படுகிறது.

இவரை போன்ற சாதி வெறி பிடித்த அரசியல் தலைவர்களை மக்கள் பின்பற்றினால் தங்களுடைய குழந்தைகளும் அதேபோன்று சாதி சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதை சிந்திக்க வேண்டும், சாதி சம்பந்தமான அரசியல் தலைவர்களை மக்கள் புறக்கணித்தால் மட்டுமே தர்மபுரி மாவட்டம் போன்ற பின்தங்கிய மாவட்டம் முன்னேற்றம் அடையும்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment