அரசின் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதள விண்ணப்ப கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது..!Online application period for admission in Govt College of Arts and Sciences has been extended

Online application period for admission in Govt College of Arts and Sciences has been extended

அரசின் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதள விண்ணப்ப கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது..!

தமிழ்நாட்டில் உள்ள அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் விண்ணப்பம் தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 24 ஆம் தேதி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது இந்த கல்லூரிகளில் BSc,Visual Communication, BA,Commerce, Economics உள்ளிட்ட.

பல்வேறு பிரிவுகளில் பாடப்பிரிவுகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தனியார் கல்லூரியில் சேர்ந்து 3 ஆண்டுகள் படித்து முடித்து வெளியில் வருவதற்குள் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது பொறியியல் கல்லூரிக்கு சென்றால் குறைந்தது 5 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை.

இதுபோன்ற இருப்பதால் அரசின் கல்லூரிக்கு சென்றால் பணம் கட்ட தேவையில்லை மேலும் அரசு கல்வி ஊக்கத் தொகையும் வழங்குகிறது மேலும் மாதம் 1,000/ ரூபாய் பணமும் வழங்குகிறது இலவச பேருந்து வசதி உள்ளது இப்படி பல்வேறு சலுகைகள் அரசின் கல்லூரியில் படிப்பதால் கிடைக்கும் என்பதால்.

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அரசின் கல்லூரியில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் மே 20ஆம் தேதி உடன் முடிந்த இணையதள விண்ணப்பம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மே 24ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் வருகின்ற 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள்.

எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடுங்கள் இல்லை என்றால் 2026 இல் ஒரு எம்எல்ஏ சீட் கூட நமக்கு கிடைக்காது..!

அந்தப் பகுதியில் உள்ள அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது இந்த மையங்களில் பட்டியல் குறித்து இணையதளம் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணமாக ஒரு மாணவருக்கு 48 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பதிவு கட்டணமாக 2 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்வகிக்கவில்லை விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யூபிஐ, மூலம் இணையதளம் மூலம் செலுத்தலாம்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment