திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிந்துள்ளது..!It has been 3 years since the DMK government took charge

It has been 3 years since the DMK government took charge

திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிந்துள்ளது..!

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு முடிந்துள்ளது இது பற்றி மக்களிடம் கேட்ட கருத்துக்கணிப்பில் மக்கள் தெரிவித்த பதிலை இது காணலாம்.

2006 முதல் 2011 வரை கருணாநிதி அவர்கள் வழங்கிய மோசமான ஆட்சியின் காரணமாக 10 ஆண்டுகள் தமிழக மக்கள் திமுகவை புறக்கணித்தார்கள் குறிப்பாக கருணாநிதி ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு பிரச்சனை.

ஊழல், கொலை, நிலஅபகரிப்பு, என பல்வேறுகள் புகார்கள் முன்வைக்கப்பட்டது 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக வெறும் 26 இடங்கள் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது அவ்வளவு மோசமாக இருந்தது கருணாநிதி தலைமையிலான ஆட்சி.

2011 வரை 2021 வரை தமிழகத்தில் என்ன நடந்தது

2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 6 மாதத்தில் மின்வெட்டு பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிவித்தார் அவர் தெரிவித்தது போலவே 2011 முதல் 2021 வரை மின்வெட்டு பிரச்சனையை தமிழகத்தில் இல்லை.

குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டம் பிரச்சனை இல்லை, ஏரிகள் நீர் நிலையங்கள் தூர்வாரப்பட்டது, குறிப்பாக அம்மா உணவகம் போன்ற மிகச் சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இப்படி 10 ஆண்டு இந்த அதிமுக அரசு மக்களிடம் நல்ல பெயர் பெற்றது.

It has been 3 years since the DMK government took charge
It has been 3 years since the DMK government took charge

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்

500க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்தது 10 ஆண்டுகள் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் நல்ல ஆட்சி கொடுப்பார்கள் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மக்களுக்கு கிடைத்ததோ அதிர்ச்சி திரும்பிய பக்கம் எல்லாம் விலைவாசி உயர்வு குறிப்பாக சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவீதம் உயர்வு.

பால் விலை உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, வாகனங்கள் பதிவு கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கட்டண உயர்வு.

நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் வெட்டியது பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு, திருவண்ணாமலையில் சிப்காட் மக்கள் எதிர்ப்பு, தொடர்ந்து போதைப்பொருள் நடமாட்டம் உயர்வு, கள்ள சாராயம் குடித்து 21 நபர்கள் உயிரிழப்பு.

கடந்த 12 நாட்களில் காவல் விசாரணையில் 4 நபர்கள் உயிரிழப்பு குறிப்பாக திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு காவல் விசாரணையில் தொடர்ந்து உயிரிழப்பு நடைபெற்று வருகிறது கடுமையான வறட்சி நீர் நிலையங்கள் பராமரிப்பு செய்யாமல் இருப்பது.

5 கோடி பனைமரம் நடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்தது என திமுக அரசின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பெரும் துயரமாக சென்று கொண்டிருக்கிறது.

தமிழக வரலாற்றில் ஸ்டாலின் ஆட்சியில் நடைபெறும் போதை பொருள் நடமாட்டம் போன்று இதுவரை எந்த ஒரு ஆட்சியிலும் நடைபெறவில்லை குறிப்பாக 2000 கோடி ரூபாய்க்கு மேல் போதை பொருள் கடத்திய ஜாபா சாதிக்.

முதலமைச்சருடன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது உலகக்கோப்பை வெற்றி பெற்றோம் என்று மாற்றுத்திறனாளி பொய்யான செய்தியை குறித்து ஸ்டாலின் மற்றும் உதயநிதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது.

இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நீங்கள் காணலாம் தமிழக அரசின் பேருந்துகளின் நிலைமையை நீங்கள் எண்ணி பார்த்தால் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

மிகப்பெரிய திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்படவில்லை எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடைபெறுகிறது என்று ஸ்டாலின் சொல்கிறார் ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர்களை மிரட்டி பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வசூல் செய்து கொடுக்க வேண்டும் என இக்கட்டான சூழ்நிலைக்கு டாஸ்மார்க் ஊழியர்கள் தள்ளப்பட்டது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்காமல் இருப்பது சென்னையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அதை சரியாக கையாளாமல் சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பியது இப்படி குற்றங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

புதனின் ராசி மாற்றம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும் சிக்கலில் இருந்து விடுபடும் 5 ராசிகள்..!

இந்த ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு, அரிசி விலை, பால் விலை, பருப்பு விலை, காய்கறிகள் விலை, சமூக வலைத்தளங்களில் ஆட்சியைப் பற்றி மீம்ஸ் போட்டால் உடனடியாக அவர்களை வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்வது போன்ற நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற ஒரு கேவலமான ஆட்சியை தமிழக வரலாற்றில் பார்த்திருக்க முடியாது குறிப்பாக திமுக அண்ணா தலைமையில் இருந்த போது நன்றாக இருந்தது எப்பொழுது கருணாநிதி அவரிடம் திமுக வந்ததோ அப்பொழுது தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு விளைவு ஏற்பட்டு விட்டது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment