TNPSC குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது..!Important information released about TNPSC Group 2 Exam

Important information released about TNPSC Group 2 Exam

TNPSC குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது..!

இந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது அதற்கான ஹால் டிக்கெட் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது விண்ணப்பம் செய்த நபர்கள் https://www.tnpsc.gov.in/,https://apply மற்றும் tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== 

என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கு என்ன தொடங்கப்பட்டுள்ள கணக்கில் உள் நுழைந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஓடிபி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவைகளை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் ஹால் டிக்கெட் பதிவு செய்து கொள்ள முடியும் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதனை பின்பற்றினால் மட்டுமே தேர்வரைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் தேர்வு எழுதும் விடைத்தாள் திருத்துவதற்கு அனுமதிக்கப்படும் தேர்வு அறையில் என்ன செய்ய வேண்டும், எந்த நேரத்திற்கு வர வேண்டும், என்ன நடக்கும், உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்கி உள்ளது அது குறித்து முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தேர்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கியமான அறிவிப்பு

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் மையத்திற்கு நீங்கள் சரியாக 8:30 மணிக்கு வரவேண்டும் சலுகை நேரம் 9:00 மணி தேர்வு தொடங்கும் நேரம் காலை 9:30 மணி அனைத்து தேர்வாளர்களும்  9:30 மணிக்குள் கட்டாயம் சரியான நேரத்திற்குள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.

9:30 மணிக்கு மேல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேர்வு முடியும் வரை யாரும் தேர்வு அறையை விட்டு செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேர்வாளர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

தவறினால் தேர்வரைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் இதனுடன் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், ஓட்டுநர் உரிமம், மத்திய மாநில அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கட்டாயம் நீங்கள் கொண்டு வர வேண்டும்.

உங்களுடைய ஹால் டிக்கெட்டில் உங்களுடைய புகைப்படம் சரியாக இல்லை என்றால் நீங்கள் வெள்ளை தாளில் உங்களுடைய அடையாள ஆவணங்களாக இருக்கும் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, பான் கார்டு, போன்றவற்றை நகல் எடுத்து அதில் வெள்ளை தாளில் இணைத்து.

இவை என்னுடையது என்று கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதில் உங்களுடைய பெயர், முகவரி, பதிவு எண், இதனை நீங்கள் தேர்வறையில் இருக்கும் அதிகாரியிடம் வழங்க வேண்டும் அனைத்தும் இருக்க வேண்டும் உங்களுக்கு தேர்வு எழுதும் போது ஏதாவது முரண்பாடு இருந்தால்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் (grievance.tnpsc@tn.gov.in) என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் கொடுக்கலாம் தேர்வு எழுத வரும் நபர்கள் கருமை நிற மை (Black Ballpoint Pen) பேனாவை கொண்டு வர வேண்டும்.

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்காலம் பாதுகாக்கப்படும்..!

மின்சாதனங்கள் கொண்டுவர அனுமதிக்க இல்லை அதே மாதிரி ரகசியமாக மின் சாதனங்கள் வைத்திருந்தால் கண்டுபிடிக்கப்பட்டால் தேர்வு எழுத அனுமதி இல்லை உங்களுடைய விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது மேலே குறிப்பிட்ட அறிவுரைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மீறினாலும் அபராதம் விதிக்கப்படலாம்.

அல்லது நிராகரிக்கப்படலாம் உங்களுடைய விடைத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் எனவே தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த முக்கியமான அறிவிப்புகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment