அரசியல் மற்றும் தேர்தலை பற்றி சமூக வலைத்தளங்களில் சிரிப்பை ஏற்படுத்திய மீம்ஸ்கள்..!Funny memes on social media about politics and elections

Funny memes on social media about politics and elections

அரசியல் மற்றும் தேர்தலை பற்றி சமூக வலைத்தளங்களில் சிரிப்பை ஏற்படுத்திய மீம்ஸ்கள்..!

தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் என்ன மாதிரியான தலைப்புகள் அதிகமாக பரவுகிறது என்பதை கவனிப்பது வாடிக்கையாகி விட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது, இந்த தேர்தல் திருவிழாவை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்களை பற்றி வெளியிடும் மீம்ஸ்கள் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது.

வீட்டுக்காரம்மா பேசிட்டாங்களாம்

நம்மளுடைய தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு சேகரிக்க வரும்போது அவரை வாழ்த்தி ஆரத்தி எடுத்தால் குறைந்தது 500 ரூபாய் பணம் மறைமுகமாக கிடைக்கும்.

இதற்கு பெண்கள் காத்திருப்பார்கள் சில நேரங்களில் அரசியல் தலைவர்களும் பணம் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்றும் திட்டமிடுவார்கள்.

அதனை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நகைச்சுவையான வடிவேல் மீம்ஸ் வேட்பாளர் வரும்போது பொம்பள வேஷம் போட்டுக்கிட்டு வந்து ஆரத்தி எடுத்து 500 ரூபாய் சம்பாதிக்க வக்கில்லாத ஆளுன்னு வீட்டுக்காரம்மா பேசிட்டாங்களாம்.

சகலையோட நிலைமையை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு என்று மீம்ஸ் வெளியிட்டு அதிக நகைச்சுவையை ஏற்படுத்தினார்கள்.

Funny memes on social media about politics and elections
Funny memes on social media about politics and elections

எனக்கென்னமோ உன் மேல சந்தேகமா இருக்கு

தேர்தல் திருவிழா என்று வந்தால் அரசியல் தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி மக்களின் ஆசைகளை தூண்டி விடுவார்கள் ஆனால் அவர்கள் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்ற மாட்டார்கள்.

அதனை மையப்படுத்தி அதிகம் பகிரப்பட்ட மீம்ஸ் இந்த கோடை காலத்தில் மழை வராமல் இருப்பதற்கு நீ அறிவித்த வாக்குறுதி முக்கிய காரணமாக இருக்கிறதோ என்று சந்தேகம் இருக்கிறது என மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது.

Funny memes on social media about politics and elections
Funny memes on social media about politics and elections

மண்வாசனை வந்தால் மழை வருது

நம் தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி விட்டால் போதும் அரசியல் தலைவர்கள் பொதுமக்களிடம் சென்று நலம் விசாரிப்பார்கள், மக்களின் குறைகளை கேட்டு அறிவார்கள், மக்களிடம் மனுக்களை பெறுவார்கள்.

மேலும் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியும் வேகமாக நடைபெறும் இந்த தேர்தலை மையப்படுத்தி ஒரு மீம்ஸ் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.

அதாவது மண்வாசனை வந்தால் மழை வருகிறது என்று அர்த்தம்! தார் வாசனை வந்தா தேர்தல் வருதுன்னு என்று அர்த்தம்! அதில் வடிவேல் புகைப்படம் இடம் பெற்று சிரிப்பை ஏற்படுத்துகிறது.

Funny memes on social media about politics and elections
Funny memes on social media about politics and elections

ஏன் தலைவரே அவனை அடிக்கிறீங்க

கரகாட்டக்காரன் படத்தில் கச்சேரிக்கு செல்லும் போது கார் பழுதாகி அதனை தள்ளிக் கொண்டு செல்லும்போது அந்த கார் பற்றிய சந்தேகத்தை செந்தில் அவர்கள் கவுண்டமணியிடம் கேட்டு தொடர்ந்து அடி வாங்குவார் அதனை மையப்படுத்தி ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடுமையான கோடை வெயிலின் காரணமாக சேலம் பெங்களூர்..!

ஏன் தலைவரே அவன அடிக்கிறீங்க தொகுதிக்கு போய் பிரச்சாரம் பண்ணுடா என்று சொன்னா வெயில் ரொம்ப அடிக்குது work from home பண்ணட்டுமான்னு கேட்கிறான்.

இந்தக் கடுமையான கோடை வெயிலிலும் அரசியல் தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் அதனை மையப்படுத்தி இந்த மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

Funny memes on social media about politics and elections
Funny memes on social media about politics and elections

ரொம்ப வில்லங்கம் புடிச்ச ஆளுங்க

அரசியல் தலைவர்கள் இதற்கு முன்பு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை மேலும் இந்த அரசியல் தலைவர்களை எப்படி தண்டிக்க வேண்டும் என்று மீம்ஸ்கள் பகிரப்பட்டு உள்ளது.

அந்த ஊர் காரனுங்க ரொம்ப வில்லங்க புடிச்சு ஆளுங்க பிரச்சாரத்திற்கு வர தலைவர்களை உச்சி வெயிலில் மணிக்கணக்கா நிக்க வச்சு அவர் பேசுவதை ரசித்து கேட்கிறா மாதிரி பனிஷ்மென்ட் தருவாங்களாம் என்று மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment