உதயநிதியின் சிறு தவறால் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படும் ஸ்டாலின் திமுகவுக்கு அவமானம் ஏற்படுகிறது..!Edappadi Palaniswami teases Stalin during the election campaign

Edappadi Palaniswami teases Stalin during the election campaign

உதயநிதியின் சிறு தவறால் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படும் ஸ்டாலின் திமுகவுக்கு அவமானம் ஏற்படுகிறது..!

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாஜக அரசை கண்டித்து எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் இன்னும் கட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி செங்கல் ஒன்றை காண்பித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் செங்கல்லை மக்களிடம் காண்பிப்பதற்கு பதிலாக உங்களுடைய எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் காண்பித்து அழுத்தம் கொடுத்து இருந்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு இருக்கும் என்று பதிலடி கொடுத்தார்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் நரேந்திர மோடி அவர்கள் சிரிச்சு பேசும் புகைப்படத்தை காண்பித்து யார் பாஜகவுடன் கள்ளக் கூட்டணியில் உள்ளார்கள் என்று தமிழக மக்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களும் உதயநிதி மற்றும் ஸ்டாலின் அவர்கள் நரேந்திர மோடியிடம் பேசும் புகைப்படத்தை காண்பித்து யார் கள்ளக் கூட்டணியில் பாஜக உடன் உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார் இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி தீவிரமாக விமர்சனம் செய்து வந்தார்கள்.

Edappadi Palaniswami teases Stalin during the election campaign
Edappadi Palaniswami teases Stalin during the election campaign

திடீரென்று எடப்பாடிக்கு தோன்றிய ஐடியா

2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி அப்போது அவர் திமுகவை பற்றி எப்படி பேசி இருந்தார் மற்றும் திரு மு க ஸ்டாலின் அவர்கள் 2016 ஆம் ஆண்டு கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் கண்டக்டர் ஓட்டுநர் வேலை வழங்குவதற்கு லஞ்சம் வாங்குகிறார்.

நான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்புவேன் என தெரிவித்தார், அதன் பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு செந்தில் பாலாஜி அவர்கள் திமுக கட்சியில் இணைந்து விட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்,அப்போது தமிழக முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

செந்தில் பாலாஜி அவர்கள் திமுகவை பற்றி எப்படி பேசி இருக்கிறார் மற்றும் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜியை பற்றி எப்படி பேசி இருக்கிறார்.

இந்த வீடியோவை கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மக்களிடத்தில் காண்பித்தார்,இது நல்ல வரவேற்பு பெற்றது திமுகவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.

இதனை உணர்ந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது செல்லும் இடமெல்லாம் இதற்கு முன்பு முக ஸ்டாலின் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை பற்றி வீடியோவாக காண்பித்து வருகிறார், மக்கள் மறந்ததையும் நினைவுப்படுத்தி வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்.

இது தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில முக்கியமான திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது என்பதையும் வீடியோவாக காண்பித்து வருகிறார், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திமுக தலைமை மற்றும் IT WING தவித்து வருகிறது.

குளம் போல் காட்சியளிக்கும் காவிரி ஆறு தண்ணீர் வரத்து 20 முதல் 30 கன அடி தண்ணீர்..!

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புகைப்படத்தை காண்பித்து எடப்பாடி கே பழனிசாமி அவர்களை கிண்டல் செய்யாமல் இருந்திருந்தால் எடப்பாடி கே பழனிசாமிக்கு இது போன்ற யோசனை தோன்றியிருக்காது.

தற்போது செல்லும் இடமெல்லாம் திமுகவை பற்றி வீடியோவாக காண்பித்து சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது திமுக.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment