பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் உடனடியாக பிரசாந்த் கிஷோரிடம் மறுபடியும் ஓடிய திமுக..!DMK invites Prashant Kishor for 2026 election duty

DMK invites Prashant Kishor for 2026 election duty

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் உடனடியாக பிரசாந்த் கிஷோரிடம் மறுபடியும் ஓடிய திமுக மறைமுகமாக நடக்கும் 2026 தேர்தலுக்கான பணிகள்..!

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துவிட்டார் 2026 ஆம் ஆண்டு நிச்சயம் தேர்தலில் களம் இறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்ட விஷயம் நடிகர் விஜய் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து முக்கியமான திட்டங்களுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு போன்றவற்றை தெரிவித்து வருகிறார்.

நடிகர் விஜய் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சில நிகழ்வுகளுக்கு நேரடியாக சென்று தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார் இவர் மட்டும் இல்லாமல் சவுக்கு சங்கர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சினிமாவில் சில பிரபலங்கள் அதிமுக கட்சியை அப்போது எதிர்த்தார்கள்.

குறிப்பாக ஆட்சி மாற்றம் வேண்டும் என முடிவு செய்தார்கள் இதற்கு தேர்தலில் இவர்கள் மறைமுகமாகவும் வேலை செய்தார்கள் அவர்கள் நினைத்தது போன்று ஆட்சி மாறியது ஆனால் அந்த ஆட்சி அவர்களுக்கு எதிராகவே திரும்பியதால் தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர தொடங்கி விட்டார்கள் மறுபடியும் அதிமுக ஆட்சி அமைந்தால் நல்லது என்ற சூழ்நிலைக்கு வந்து விட்டார்கள்.

நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து அதிர்ந்த திமுக

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது இதற்கு நடிகர் விஜய் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்தார் இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் சினிமாத்துறை உட்பட அனைத்து துறையும் சுதந்திரமாக இயங்கும் கட்சிக்காரர்களின் தலையீடு அவ்வளவாக இருக்காது சினிமா துறைக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் இதனால் பல தயாரிப்பாளர்கள் லாபங்களை பார்த்து வந்தார்கள்.

ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் அப்படி இல்லை திமுக குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைத்து படங்களையும் வாங்கி விடுவார்கள் இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் மேலும் தாங்கள் கேட்கும் விலைக்கு தான் படத்தை கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற சூழ்நிலை இருப்பதால் சினிமா துறையில் தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக மறைமுகமாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்கினாலும் அவரால் முதலமைச்சர் பதவியை பெற முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடந்த 14 ஆண்டுகளாக தேர்தலில் களம் இறங்கி தோல்விகளை மட்டும் சந்தித்து வருகிறார் சவுக்கு மீடியா தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் இதுபோன்ற நேரத்தில் அதிமுக சவுக்கு சங்கருக்கு உதவி செய்து வருகிறது.

தற்போது நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு வாழ்த்து சொன்னதும் அன்றைய தினமே திமுக உடனடியாக ஆலோசனை செய்து மறுபடியும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கு பிரசாந்த் கிஷோரை கட்டாயம் அழைத்து வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

காரணம் நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சி, சவுக்கு சங்கர், உள்ளிட்ட நபர்கள் 2026 ஆம் ஆண்டு ஒன்று சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது ஏனென்றால் இவர்கள் 3 பேரும் திமுகவால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடத்திற்கு வருவதற்கு முயற்சி

நாம் தமிழர் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சீமானுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது ஏனென்றால் தொடர்ந்து 14 ஆண்டுகள் தோல்வியை வருவதால்.

கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் சோர்வடைந்து உள்ளார்கள் 2011 ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார் அதுபோலவே நாமும் இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் மேலும் குறைந்தபட்சம் 30 தொகுதிகள் வெற்றி பெற்று.

சட்டமன்றத்தில் நுழைந்தால் நிலையான தேர்தல் சின்னம் கிடைக்கும் அதற்குப் பிறகு கட்சியை வளர்ப்பது மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதை பற்றி முடிவு எடுப்போம் தற்போது திமுக வலுவான கூட்டணி வைத்துள்ளது ஆனால் மக்களிடம் திமுகவிற்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை.

திரும்பிய பக்கம் எல்லாம் கடுமையான விமர்சனம் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் திமுக மீது, இது போன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தினால் கட்சியை வளர்த்து விடலாம் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தால் வரலாற்றில் பதிவு செய்யலாம் என சீமானுக்கு பல்வேறு அறிவுரைகள் செல்கிறதாம்.

மேலும் நடிகர் விஜயும் திமுகவை அகற்றியாக வேண்டும் என முடிவோடு இருக்கிறாரா காரணம் உதயநிதியால் நடிகர் விஜய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் நடிகர் விஜய்க்கு சினிமாவிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் வருகிறதாம் நீங்கள் நினைத்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் தயவு செய்து சரியான முடிவு எடுங்கள்.

மறுபடியும் திமுக வெற்றி பெற்றால் சினிமாத்துறை என்பது தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமாகிவிடும் தயவு செய்து எங்களுடைய வாழ்க்கையும் நினைத்து பாருங்கள் உங்களால் எங்களுடைய வாழ்க்கையை மாற்ற முடியும் என நடிகர் விஜய்க்கு சினிமாவில் சிறிய பிரபலங்கள் முதல் நட்சத்திரங்கள் வரை பரிந்துரை செய்கிறார்களாம்.

நடிகர் விஜய்யும் அவர்கள் சொல்வதை அமைதியாக கேட்டு வருகிறாராம் அவரும் திமுகவால் பாதிக்கப்பட்டுள்ளார் மேலும் அவருடைய ரசிகர் மன்ற முக்கிய தலைவர்கள் மீதும் அவ்வப்போது வழக்குகள் பதிவு செய்யப்படுவது நடிகர் விஜய்க்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதா.

சவுக்கு சங்கர் நிச்சயம் அமைப்பை தொடங்குகிறார்

சவுக்கு சங்கர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டா சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது சவுக்கு சங்கர் ஏற்கனவே மிகப்பெரிய ஒரு கூட்டத்தை வைத்துள்ளார் சவுக்கு சங்கருக்கு தமிழக முழுவதும் இருந்து ஆதரவுகள் இருக்கிறது.

அவர் ஏற்கனவே வருகின்ற செப்டம்பர் மாதம் புதிய அமைப்பை தொடங்குவதாக தெரிவித்தார் தற்போது அவர் சிறையில் இருக்கிறார் அவர் சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு ஓராண்டு தேவைப்படும் வெளியில் வந்த பிறகு நேரடியாக புதிய கட்சி அல்லது அமைப்பை தொடங்கினால் இனி வரும் காலங்களில் தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று முடிவு செய்துள்ளதாக அவருடைய நண்பர்கள் கதுகிறார்கள்.

நிச்சயம் சவுக்கு சங்கர் வெளியில் வந்தால் திமுகவிற்கு எதிராக மிகப்பெரிய அணி திரட்டுவார் அவர் அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்பார் என்பது உறுதியாகி உள்ளது இதனால் திமுக தற்போது சுதாரித்துக் கொண்டது நடிகர் விஜய் திமுக தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

சிம்மத்தில் அபூர்வ நவ பஞ்சம கூட்டம் 3 ராசிக்காரர்களுக்கும் இப்போது வாழ்க்கை அழகாக இருக்கிறது..!

ஆனால் அதிமுக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை உடனடியாக பிரசாந்த் கிஷோரை தொடர்பு கொண்டு எங்களுக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கு.

நீங்கள் வரவேண்டும் பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் வந்தால் மட்டும் போதும் என கேட்டுக் கொண்டுள்ளது பிரசாந்த் கிஷோரும் இதைப்பற்றி விரைவில் நல்ல முடிவு தெரிவிக்கிறேன் என்று சொல்லி உள்ளாராம்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment