திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..!Case was registered against Tirupur BJP candidate Muruganandan

Case was registered against Tirupur BJP candidate Muruganandan

திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..!

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது அதற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது,இதற்கான தேர்தல் தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடைமுறைகள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது

தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் துணை இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் உடன் இணைந்து தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே பறக்கும் படையினர் சோதனை நடத்தி டீ-சர்ட் கள், பரிசு பொருட்கள், பணங்கள், உள்ளிட்டவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சில தேர்தல் அதிகாரிகள் சரியாக சோதனை செய்யவில்லை என்று புகார் வருகிறது, அதை பற்றி வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளி வருகிறது அதற்கு தேர்தல் ஆணையமும் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

Case was registered against Tirupur BJP candidate Muruganandan
Case was registered against Tirupur BJP candidate Muruganandan

திருப்பூர் பாஜக தொகுதி வேட்பாளர் மீது ஏன் வழக்கு பதிவு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள், அவ்வழியாக வந்த திருப்பூர் பாஜக தொகுதி வேட்பாளர் முருகானந்தம் வாகனத்தை நிறுத்தாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காவல்துறையினர் பொறுமையாக மரியாதையுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள் இதைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் முருகானந்தம் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் உன்னை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று மிரட்டும் தோனியில் பேசினார்.

இது பற்றிய வீடியோ முழுவதும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டது இது குறித்து.

தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் வாகன சோதனையின் போது அதிகாரிகளை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தன் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகும் நினைத்துப் பாருங்கள்

பிஜேபிக்கு தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு 4 சதவீத வாக்குகள் கிடைத்தது 2024 ஆம் ஆண்டு பிஜேபியுடன் தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகள் கூட்டணி வைக்க தயக்கம் கொண்டார்கள் இருந்தாலும் பிஜேபி பாமகவை மிரட்டி கூட்டணிக்கு அடிபணிய வைத்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளி வருகிறது.

உங்களைக் கவர்ந்த இந்த 3 தலைவர்களில் உங்களுடைய வாக்கு யாருக்கு..!

பிஜேபிக்கு இன்னும் தமிழகத்தில் 10% வாக்கு வங்கி கூட உயரவில்லை அப்படி இருக்கும் சூழ்நிலையில் தேர்தல் அதிகாரிகளை பிஜேபி வேட்பாளர் மிரட்டுவது தமிழக மக்கள் இடையே.

பிஜேபி பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்பி விட்டு பிஜேபி பற்றிய கேலி கிண்டல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment