கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது..!BJP leader arrested for giving money to voters in Coimbatore

BJP leader arrested for giving money to voters in Coimbatore

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் முடிவடைந்தது, நாளை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்காளர்களுக்கு எந்த அரசியல் கட்சியும் கண்டிப்பாக பணம் கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கடுமையான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருந்தாலும் சில இடங்களில் வாக்குகளை பெறுவதற்கு வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

தேர்தல் பறக்கும் படையும் தொடர்ந்து தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் கோவையில் நான் தேர்தலுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் ஆனால் தற்போது கோவையில் பாஜக நிர்வாகி சில இடங்களில் பணம் விநியோகம் செய்து கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

கோவையில் பாஜகவினர் பண விநியோகம்

கோவை புலுவப்பட்டியில் தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் பிரித்துக் கொடுத்த பாஜக பிரமுகர் ஜோதிமணி கைது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஜோதிமணி என்ற நபரிடம் இருந்து.

எந்த ஒரு ஆவணம் இன்றி 81,000/- ரூபாய் பணம் பூத் ஸ்லிப் உள்ளிட்டவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

BJP leader arrested for giving money to voters in Coimbatore
BJP leader arrested for giving money to voters in Coimbatore

அண்ணாமலை பேசுவது அனைத்தும் பொய்

இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள் திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்கிறார்கள் என்று தொடர்ந்து அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

நான் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு கண்டிப்பாக செலவு செய்ய மாட்டேன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஆனால் தற்போது பாஜக பிரமுகர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அண்ணாமலையை நோக்கி சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

பிஜேபி கட்சிக்குள் உட்கட்சி பூசல்

பிஜேபி கட்சியின் முக்கிய தலைவராக ஒருவராக இருக்கும் நாயனார் நகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஊழியர்கள் எடுத்துச் சென்ற 4 கோடி ரூபாய் பணம் ரகசியமாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டு.

அது பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பாஜக கட்சியில் இந்த தேர்தலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment