எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடுங்கள் இல்லை என்றால் 2026 இல் ஒரு எம்எல்ஏ சீட் கூட நமக்கு கிடைக்காது..!BJP is trying to take over AIADMK for 2026 elections

BJP is trying to take over AIADMK for 2026 elections

எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடுங்கள் இல்லை என்றால் 2026 இல் ஒரு எம்எல்ஏ சீட் கூட நமக்கு கிடைக்காது..!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அமைதியாகிவிட்டார்கள் திடீரென்று அதிமுகவிற்குள் பிளவு என்ற ஒரு செய்தி உலா வந்தது நன்றாக விசாரித்து பார்த்ததில்.

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணிகள் இப்பவே தொடங்கப்பட்டுள்ளது திமுக அரசின் 3 ஆண்டுகால அலங்கோல ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை தொடர்ந்து விலை ஏற்றம் இருந்து கொண்டே இருக்கிறது.

முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த தேர்தலில் 10க்கு மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள் தமிழக வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடந்ததில்லை.

குறிப்பாக திமுக ஆட்சியில் நடந்தது இது திமுகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் அரசாங்க ஊழியர்களும் திமுகவின் மீது கடுமையான கோபத்தில் உள்ளார்கள் முக்கியமாக பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் திமுக அரசின் மீது தீராத கோவத்தில் தற்போது உள்ளார்கள்.

அதிமுக இருந்தால் மட்டுமே பாஜக

2026 ஆம் ஆண்டு ஒரு எம்எல்ஏ சீட் ஜெயிக்க வேண்டும் என்றால் அதிமுகவின் கூட்டணி இருந்தால் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது காரணம் தமிழகத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள், மலைவாழ் கிராம மக்கள், போன்றவர்கள் நிச்சயம் பிஜேபிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

இது போன்ற வாக்காளர்கள் கடந்த முறை திமுகவிற்கு வாக்களித்து அதன் பிறகு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவ்வப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வேங்கை வயல் பிரச்சனை, நாங்குநேரி பிரச்சினை, சேலத்தில் தீவட்டி பட்டியில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் இப்படி திரும்பி பக்கம் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளது.

இஸ்லாமியர்களும் திமுகவின் மீது கடுமையான கோபத்தில் உள்ளார்கள் காரணம் பல ஆண்டுகளாக இஸ்லாமிய சிறை கைதிகளை திமுக விடுதலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் திமுகவிற்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் இருக்கிறது இதை அதிமுக சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிஜேபி நிச்சயம் வெற்றி பெற முடியாது

நடந்த முடிந்த தேர்தலில் பிஜேபி கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் நடந்தது அதாவது தேர்தலுக்கு கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகிகள் செலவுசெய்து விட்டார்கள் முக்கியமாக சில இடங்களில் தேர்தல் பிரச்சாரம் கூட செய்யவில்லை தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை அமைப்பது பெரும் சவாலாக இருக்கிறது பிஜேபிக்கு.

திமுகவிற்கு அதிமுக பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் நாம் மறுபடியும் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறது பிஜேபி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் சில தொகுதிகளில் வெற்றி பெறலாம் என முடிவு செய்து இருக்கிறது.

இதனால் திமுகவும் பிஜேபியும் மறைமுகமாக அதிமுகவை தற்போது தாக்க தொடங்கியுள்ளார்கள் இதனை உணர்ந்து கொண்ட அதிமுகவின் உயர்மட்ட தலைவர்கள் மறைமுகமாக பல்வேறு சந்திப்புகளை நடத்தி அடுத்த கட்ட நகர்வுகளை ஏற்படுத்தி உள்ளார்களாம்.

நடிகர் விஜய் இதுவரை எந்த கட்சி தலைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை அதிமுகவுடன் 2026 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அல்லது நாம் தமிழர் கட்சி இணைந்தால் நிச்சயம் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்பது உறுதி.

இதனை உணர்ந்து கொண்ட விஜய் சீமான் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள் சீமான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும்.

மேலும் சீமானுக்கு குறைந்தது 40 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் இதன் மூலம் பல ஆண்டுகளாக திமுகவின் மீது தீராத கோவத்தில் உள்ள சீமான் திமுகவை நிச்சயம் பழிவாங்க இது நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்துள்ளார்.

புதிய அமைப்பை தொடங்கும் சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் தற்போது திமுக அரசால் பழிவாங்கப்பட்டு வருகிறார் வெளியில் வர ஒரு ஆண்டு தேவைப்படும் அதன் பிறகு நிச்சயம் திமுகவை இவர் சரா மாறியாக தாக்குவார் திமுகவை பழிவாங்க வேண்டும்.

உதயநிதியை முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்கக்கூடாது என்பதில் சவுக்கு சங்கர் உள்ளார் இவரை காப்பாற்ற தற்போது அதிமுக மட்டுமே உள்ளது அதிமுகவின் வழக்கறிஞர்கள் மட்டுமே இவருக்கு களத்தில் இறங்கி வாதாடி வருகிறார்கள்.

இதனால் சவுக்கு சங்கர் வெளியில் வந்தால் நிச்சயம் அதிமுகவிற்கு தேர்தல் பணியில் இறங்குவார் இது திமுகவிற்கு மிகப்பெரிய பேரடியாக அமையும்

என்னை அழைக்காதீர்கள் நான் நிச்சயம் வரமாட்டேன்

2026 ஆம் ஆண்டிற்கு பிரசாந்த் கிஷோரை எப்படியாவது தேர்தல் பணிக்கு அழைத்து வரவேண்டும் என திமுக முடிவு செய்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம் தயவுசெய்து தேர்தல் பணிக்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் என்னை மன்னித்து விடுங்கள் 2026 ஆம் ஆண்டு நான் நிச்சயம் உங்களுக்கு வேலை செய்ய வரமாட்டேன் இனி நான் எனக்காக புதிய கட்சியை ஒன்றை தொடங்கி அதன் பணிகளில் கவனம் செலுத்த போகிறேன் நீங்கள் அதிமுகவையும் பிஜேபியின் கூட்டணி சேர வைத்து விடுங்கள்.

சவுக்கு சங்கர் வழக்கில் வேகம் குறைகிறது சவுக்கு சங்கர் வெளியில் வருவதற்கு அறிகுறிகள் தெரிகிறது..!

அதன் பிறகு நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள் அதிமுகவும் பிஜேபியும் கூட்டணி வைக்கவில்லை என்றால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு நீங்கள் தோற்பது உறுதி என்பதை தெரிவித்த உடன்.

திரு மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அமைதியாகி விட்டார்கள் ஜூன் மாதம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு பல்வேறு பணிகள் மறைமுகமாக நடந்து வருகிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment