2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் அண்ணாமலைக்கு மூன்றாவது இடம் கிடைக்கும்..!Annamalai will get third place in the 2024 parliamentary elections in covi

Annamalai will get third place in the 2024 parliamentary elections in covi

2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் அண்ணாமலைக்கு மூன்றாவது இடம் கிடைக்கும்..!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார், திமுக சார்பில் பா.ராஜ்குமார் போட்டியிடுகிறார் இவர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் என்றும் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் சில முக்கிய தொகுதிகளில் யாருக்கு வெற்றி என்று முன்கூட்டியே கணிக்கப்படும் மேலும் இந்த தொகுதியை கைப்பற்றினால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதி மூலம் பல்வேறு தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று அரசியல் கட்சிகள் திட்டம் தீட்டுகிறது.

அதில் எப்பொழுது முக்கியமாக இருப்பது கொங்கு மண்டலம் அதில் கோவை முக்கிய இடத்தை பிடிக்கிறது தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் எப்பொழுதுமே அதிமுக வெற்றி பெறும் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை பிடித்ததால் 66 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது இப்படி கொங்கு மண்டலம் மிக முக்கியமான இடமாக தமிழகத்தில் கருத்தப்படுகிறது.

இந்த கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அவருடைய வேட்பு மனு ஏற்கப்பட்டு விட்டது.

அனைத்து கட்சிகளும் கோவையை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்,அதிமுகவின் முக்கிய தலைவராக இருக்கும் எஸ் பி வேலுமணி கோவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை நிச்சயம் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

மேலும் சிங்கை ராமச்சந்திரன் கோவையில் பிறந்தவர் இவர் அதிகம் படித்தவர் கோவையில் புகழ்பெற்ற பி எஸ் ஜி கல்லூரியில் படித்தவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கோவை பி எஸ் டி கல்லூரியில் படித்தவர், திமுக சார்பில் போட்டியிடும் பா.ராஜ்குமார் அவரும் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர், இப்படி இந்த கல்லூரியில் படித்தவர்கள் போட்டியிடுவதால் கோவையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Annamalai will get third place in the 2024 parliamentary elections in covi
Annamalai will get third place in the 2024 parliamentary elections in covi

கோவையில் அண்ணாமலைக்கு 3ம் இடம்

கோவையில் அண்ணாமலைக்கு 3ம் இடம் கிடைக்கும் என்று அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள் கோவையில் நிச்சயம் சிங்கை ராமச்சந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று எஸ் பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள், இதனால் நிச்சயம் கோவையில் சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெறுவார் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

கோவையில் ராஜவீதி, தெப்பக்குளம் மைதானம், உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு கூட்டம் கூடவில்லை.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் அதிமுக உதவியுடன் வெற்றி பெற்றார், தற்போது அதிமுக கோவையில் தீவிரமாக சிங்கை ராமச்சந்திரனுக்கு பணியாற்றி வருவதால் நிச்சயம் இவர் வெற்றி பெறுவார் என்று கோவையில் பெரும்பாலான மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் வருங்காலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா..!

மேலும் அண்ணாமலை கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர், சிங்கை ராமச்சந்திரன் கோயம்புத்தூரை சேர்ந்தவர் அதிகம் படித்தவர் இவர் கோவையில் செல்வாக்கு மிக்கவர்.

எம்ஜிஆர் இருந்த காலம் முதல் எடப்பாடி கே பழனிசாமி ஆட்சி செய்தவரை கோயம்புத்தூரில் அதிக அளவில் வெற்றி பெற்றது அதிமுக இது அதிமுகவின் கோட்டை முடிந்தால் அண்ணாமலை வெற்றி பெறட்டும் அண்ணாமலைக்கு கோவையில் 3ம் இடம் கிடைக்கும் என்று பிரச்சாரத்தில் அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment