தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களிடம் தந்தி டிவி நடத்திய நேர்காணல்..!An interview with Edappadi Palaniswami by Thandi TV

An interview with Edappadi Palaniswami by Thandi TV

தமிழகத்தில் தேர்தல் திருவிழா உச்ச கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் பிரச்சாரத்திற்கு 13 நாட்கள் மட்டுமே உள்ளது, அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாறி மாறி புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

தந்தி டிவி அனைத்து கட்சி தலைவர்களிடம் நேர்காணல் நடத்துகிறது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களிடம் தந்தி டிவி நடத்திய நேர்காணல்.

04.04.2024 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது அதில் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலில் சில முக்கியமான தமிழகம் சார்ந்த தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் அதிமுக வெற்றி பெறும்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது, இந்த தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுகிறது

தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.

தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் நாங்கள் இதற்கு முன்பு தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்தோம், அப்போது அவர்கள் கொண்டுவரும் திட்டம் தேசிய அளவில் இருக்கிறது அந்த திட்டம் சில நேரங்களில் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதில் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது நாங்கள் கூட்டணி வைத்துள்ள காரணத்தால் எதிர்த்து குரல் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது இதனால் தமிழக மக்களிடம் எங்களுக்கு எதிர்ப்பு சூழ்நிலை உருவாகிறது.

இதனை கருத்தில் கொண்டு நாங்கள் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டோம், தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் இணைந்து இனிவரும் காலங்களில் தேர்தலை சந்திக்கலாம் என முடிவு செய்துள்ளோம்,என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக கருத்துக்களை பதிவு செய்ய முடியவில்லை சில திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவதில்லை.

தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லை என்றால் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கலாம் தமிழகத்திற்கு எதிராக திட்டங்கள் இருந்தால் நேரடி குரல் கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறைமுகமாக பாஜகவை சாடியுள்ளார்.

திமுக ஊழல் மிகுந்த திறமையற்ற அரசாக மக்கள் பார்க்கிறார்கள்

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு எந்த ஒரு நல திட்டங்களையும் பெறவில்லை என எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை அதற்கு தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செங்கல்லை காண்பித்து மக்களிடத்தில் வாக்கு கேட்கிறார்.

அந்த செங்கல்லை நாடாளுமன்றத்தில் காண்பித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான அழுத்தத்தை கொடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற செய்திருக்கலாம் என எடப்பாடி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த காலதாமதம் செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 நபர்கள் 22 நாட்கள் தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கினார்கள் கடுமையான அழுத்தம் கொடுத்தார்கள் இந்த அழுத்தத்தின் காரணமாக காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது.

பிஜேபி கூட்டணியை அதிமுக தவிர்ப்பதற்கு என்ன காரணம்

பிஜேபி கூட்டணி முறிவு குறித்து தந்தி டிவி நிருபர் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அளித்த பதில் தமிழகத்தில் பிஜேபிக்கு எப்படி எதிர்ப்பு இருக்கிறது என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எண்ணங்கள் அந்த எண்ணங்கள் எங்களுடைய தலைவர்களிடம் பிரதிபலித்தது அதன்படி தலைமைக் கழக நிர்வாகிகள் எடுத்த முடிவு இது.

An interview with Edappadi Palaniswami by Thandi TV
An interview with Edappadi Palaniswami by Thandi TV

தமிழகத்தின் கடன் பற்றிய தகவல்கள்

2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் பொழுது தமிழகத்தின் கடன் தொகை ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு தமிழகத்தின் கடன் தொகை இரண்டு லட்சத்தி 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார் அதன் பிறகு நான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தேன் 2021 வரை ஆட்சி செய்தேன்.

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது அப்போது தமிழகத்தின் கடன் தொகை 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.

ஆனால் எங்களுடைய ஆட்சியில் எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தோம் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றினோம்,அதிகமான மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு, புதிய மேம்பாலங்கள், அதிகமான சாலைகள், நிறைய கட்டமைப்புகள், தடுப்பணைகள், குடிமரத்து பணிகள், இப்படி பல திட்டங்கள் கொண்டு வந்து மக்களிடம் நற்பெயர் பெற்றோம்.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது அது எங்களுடைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இப்படி பல திட்டங்கள் கொண்டு வந்தோம் நாங்கள் ஆட்சியை விட்டு இறங்கும்போது 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தது அதுவும் கொரோனா போன்ற நோய் தொற்று காலங்களில் அரசுக்கு வருவாய் இல்லை.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு வருடம் அரசுக்கு வருவாய் இல்லை அப்போது தமிழகத்தில் 60,000/- கோடி ரூபாய் வருவாய் இழப்பு இருந்தது கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தோம்.

காலால் வரி இல்லை, சாலை வரி இல்லை, பெட்ரோல் டீசல் போன்றவற்றில் வருமானம் இல்லை, கொரோனா நோய் தொற்று காரணமாக அனைத்தும் மூடப்பட்டு இருந்தது தொழிற்சாலையில் இருந்து ஜிஎஸ்டி வருவாய் இல்லை.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் மாவட்டங்கள் பட்டியல்கள்..!

இப்படி அரசுக்கு வருவாய் இல்லாத நேரத்தில் மக்களுக்கு விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம்,மேலும் தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டோம் என தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு அன்று முதல் இன்று வரை மூணரை லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்கள் தமிழகத்தின் கடன் சுமையை பல மடங்கு அதிகரித்துள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment