நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்..!A student was killed in a fight between two school students in Namakkal

A student was killed in a fight between two school students in Namakkal

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்..!

திமுக அரசின் மாபெரும் சாதனை என்னவென்றால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்கள் போதை பொருட்கள் இருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது

குறிப்பாக திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் என்பது மிக அதிகமாக இருக்கிறது இதனால் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறுவதை நாம் தினம்தோறும் செய்திகளில் கேட்டு வருகிறோம்

பள்ளிகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டம் இருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது மேலும் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் வன்முறை அதிகமாக இருக்கிறது.

இதனை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த விடியா திமுக அரசு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை வட்டம் அருகே ஏற்கனவே மாணவர்கள் இடையே சாதி மோதல்கள் வன்முறை மிக உச்சகட்டத்தில் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்து.

கோவையில் மூன்று பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியது என்பது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்று சொல்லலாம்.

இந்த விடியாத திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறது ஆனால் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதில் கவனம் இல்லை.

நாமக்கல்லில் இரு பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த சண்டையில் ஒரு மாணவர் உயிரிழப்பு என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது.

நாமக்கல் பள்ளியில் என்ன நடந்தது

நாமக்கல் அருகே இரு பள்ளி மாணவர்களிடையே நடந்த சண்டையில் ஒரு மாணவர் உயிரிழப்பு என்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, செருப்பு தொடர்பான ஏற்பட்ட வாக்குவாதத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு என்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக குறிக்கிறது.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அடுத்த வரகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, எருமப்பட்டி அடுத்த நாவலூர் பட்டியை சேர்ந்த ரமேஷ் லாரி ஓட்டுநர் இவருடைய மகன் ஆகாஷ் 16 வயது பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார், அதே பள்ளியில் செல்லிபாளையத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவரின் மகன் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை பள்ளியில் என்ன நடந்தது

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வகுப்பு அறைக்கு வெளியே விடப்பட்டிருந்த ஆகாஷ் செருப்பு காணாமல் போய் இருந்தது அப்போது கூச்சலிட்டு தன்னுடைய செருப்பை யார் எடுத்தது என்று திட்டியுள்ளார் அப்போது செல்லி பாளையத்தை சேர்ந்த.

மாணவன் நான்தான் எடுத்தேன் எனக் கூறியுள்ளார் அப்போது இருவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி இருவரும் அடித்துக்கொண்டு உள்ளார்கள் சக மாணவர்கள் இருவரையும் விலக்கிவிட முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.

இரண்டு மாணவர்களும் சரிசமமாக சண்டையிட்டதால் ஆகாஷ் சுருண்டு விழுந்துள்ளார் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை உடனடியாக மற்ற மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவலை தெரிவித்துள்ளார்கள் விரைந்து காவல்துறை மற்றும் மருத்துவ துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள் அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக நாமக்கல் தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்..!

அழைத்து சென்ற போது அவனை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்கள் இதை அறிந்த பெற்றோர்கள் தங்களுடைய மாணவன் உயிரிழப்பிற்கு கட்டாயம் நியாயம் வேணும் என குரல் எழுப்பி உள்ளார்கள்

எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை ஊழல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளது பொதுமக்கள் தங்களுடைய வாழ்க்கையை சரியாக காப்பாற்ற முடியவில்லை விலைவாசி உயர்வு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது

42 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக செலவு

சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கு தமிழக அரசு 42 கோடி ஒதுக்கி உள்ளது இதனால் தமிழக அரசுக்கு எந்த விதமான நன்மையும் இல்லை மக்களுக்கும் நன்மைகள் இல்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சீமான் உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment