வட உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும்..!The effect of summer heat will increase in TN for the next 5 days

The effect of summer heat will increase in TN for the next 5 days

தமிழகத்தில் வட உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது மார்ச் மாதம் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

பொதுவாக கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் மே மாதம் கத்தரி வெயில் தாக்கத்தின் போது அதிகரிக்கும் என்று நம்மளுடைய பஞ்சாங்கம் தெரிவிக்கிறது ஆனால் இன்னும் கத்திரி வெயில் தொடங்கவில்லை.

இப்பொழுது வெயில் வாட்டி வதைக்கிறது அதிகாலை 8 மணி போன்ற நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்கினால் மதியம் 2 மணி போன்ற வெப்பம் உணர முடிகிறது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் போக்குவரத்து கணிசமாக குறைந்துள்ளது பொது மக்களாலும் வெளியில் நடமாட முடியவில்லை.

குறிப்பாக வட உள் மாவட்டங்களில் கரூர், சேலம்,ஈரோடு, கோவை, தர்மபுரி, போன்ற மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது, குறிப்பாக கரூர்,தர்மபுரி போன்ற மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது.

The effect of summer heat will increase in TN for the next 5 days
The effect of summer heat will increase in TN for the next 5 days

வெயிலின் தாக்கம் வட உள் மாவட்டங்களில்

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக உள் மாவட்டங்களில் குறிப்பாக சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

தமிழக கடலோரப் பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக பதிவாகும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பகுதியில் இயல்பான வெப்பம் இருக்கும்.

ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திருச்சி, தர்மபுரி, மதுரை, திருப்பத்தூர், வாணியம்பாடி, நாமக்கல், போன்ற மாவட்டங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

காவிரியின் குறுக்கே நிச்சயம் மேகதாது அணை கட்டுவோம் கர்நாடகா துணை முதலமைச்சர் உறுதி..!

தமிழக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, போன்ற தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment