2024க்கு இப்படியா அப்போ 2026க்கு எப்படி இருக்கும் அதிமுகவின் தேர்தல் பிரச்சார வியூகத்தை சமாளிக்க முடியாமல் திணறும் திமுக..!DMK is unable to cope with AIADMK election campaign strategy

DMK is unable to cope with AIADMK election campaign strategy

2024க்கு இப்படியா அப்போ 2026க்கு எப்படி இருக்கும் அதிமுகவின் தேர்தல் பிரச்சார வியூகத்தை சமாளிக்க முடியாமல் திணறும் திமுக..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் திமுக மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது பாஜக நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

அதிமுக இந்த முறை 40 தொகுதிகளில் தோற்கும் என்ற கருத்துக்கணிப்பும் போலியாக வெளியிடப்பட்டது,ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பிரச்சாரத்தில் சில வியூகங்களை கடைப்பிடித்து வருவதால் திமுகவால் அதிமுகவை சமாளிக்க முடியவில்லை.

பாஜக இருந்த இடம் இல்லாமல் சென்று விட்டது தற்போது ஒவ்வொரு நாளும் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி எதைப் பற்றி பேசுகிறார் என்பது தலைப்புச் செய்திகளாக வெளி வருகிறது.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள், போன்ற அனைத்து இடங்களிலும் அதிமுகவை பற்றி விளம்பரங்கள் வெளி வருகிறது.

இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த எடப்பாடி

அதிமுக இளைஞர்களின் வாக்குகளை எப்படி கவரப்போகிறது என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.

சவுக்கு சங்கர் உட்பட சில youtube சேனல் நடத்தும் நபர்கள் அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி உருவாக்கினால் மட்டுமே இளைஞர்களின் வாக்குகளை கவர முடியும் என கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.

ஆனால் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தந்தி டிவி, நியூஸ் 18 தமிழ் உள்ளிட்ட டிவி சேனல்களுக்கு வழங்கிய நேர்காணல் இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்து விட்டது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் கடன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டோம்,விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வைத்தோம்.

முக்கியமாக இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு அவர்களின் கல்வியை உயர்த்துவதற்கு சில திட்டங்களை கொண்டு வந்தோம்.

கொரோனா போன்ற நோய் தொற்று நேரங்களில் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று இலவசமாக அவர்களுக்கு ரீசார்ஜ் செய்து வீட்டில் இருந்து கல்வி கற்க ஏற்பாடு செய்தோம்.

12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசம் மடிக்கணினி வழங்கினோம்,பட்டப் படிப்பு படித்த பெண்கள் திருமணம் செய்தால் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கினோம்.

கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆடு மாடு கோழி வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது, தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு வருடமும் தேர்வை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தினோம் என்று புள்ளி விவரங்களுடன் நேர்காணலில் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் இளைஞர்களின் கவனத்தை அதிமுக ஈர்த்தது.

DMK is unable to cope with AIADMK election campaign strategy
DMK is unable to cope with AIADMK election campaign strategy

மு க ஸ்டாலின் நேர்காணல் கொடுக்க வேண்டும் இளைஞர்களின் கோரிக்கை

கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேர்காணல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்து இதுவரை மூணரை இலட்சம் கோடி கடன் பெற்றுள்ளார்கள் எதற்காக கடன் பெற்றார்கள் அந்த தொகையை எந்த திட்டத்திற்கு செலவு செய்தார்கள், என்ற புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் கேட்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரங்களில் வீடியோக்கள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது திமுக வழங்கிய வாக்குறுதிகளை பற்றி வீடியோவாக மக்களிடம் காண்பித்து.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு கிராமப்புறங்களில் தொடங்கியுள்ளது..!

இதில் எந்த திட்டம் உங்களுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது, என்று நேரடியாக மக்களிடம் கேள்வி கேட்கிறார் இது மக்களை சிந்திக்க வைக்கிறது இது திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment