உதயநிதியின் தேர்தல் பிரச்சார வியூகம் மக்களிடத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..!A public opinion poll was conducted about Udhayanidhi Stalin

A public opinion poll was conducted about Udhayanidhi Stalin

உதயநிதியின் தேர்தல் பிரச்சார வியூகம் மக்களிடத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது,என்று நடத்திய கருத்துக்கணிப்பில் சில அதிர்ச்சியூட்டும் தகவலை மக்கள் வழங்கி உள்ளார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவின் இளைஞர் அணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சில வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்,அதைப்பற்றி (AIRNEWSTAMIL24.IN) நம்முடைய இணையதளம் மக்களிடத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் தெரிவித்த கருத்து திமுகவிற்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆத்தூர், கோவை, திருப்பூர், மயிலாடுதுறை, கடலூர், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகாசி, உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் நேரடியாக சென்று உதயநிதியின் கருத்துக்களை பற்றி சில கேள்விகளை முன் வைத்தோம்.

அதற்கு மக்கள் சில அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்கள்,இந்த கருத்துக்கணிப்பில் 60 ஆயிரம் சாம்பிள்கள் பெறப்பட்டது, அதில் கிட்டத்தட்ட 58 சதவீத மக்கள் உதயநிதி மீது அதிர்ச்சியில் உள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்

தேர்தல் பிரச்சாரத்தின் போது திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சில வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்,அதில் முக்கியமானது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

அதாவது இந்த திட்டத்தில் இதுவரை விடுபட்ட பெண்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்படும் என தெரிவித்து வருகிறார்,இது குறித்து பெண்களிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெண்கள் சில கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

அதாவது 2021 ஆம் ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினார்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்று இரண்டரை வருடம் கழித்து இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது அப்பொழுது தகுதி வாய்ந்த பெண்கள் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.

அதில் வீட்டில் அரசாங்க வேலையில் இருக்கக் கூடாது, வருமான வரி கட்டக்கூடாது, டிராக்டர், கார், உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது இப்படி பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது.

இதனால் ஒரு கோடியே 7 லட்சம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் சொல்வதை நாங்கள் நம்பவில்லை அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.

முக்கியமாக நீட் ரத்து ரகசியம் எனக்கு தெரியும் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று தெரிவித்தார்.

இதுவரை நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படவில்லை அதனால் உதயநிதி சொல்வதை நாங்கள் நம்பவில்லை என 58 சதவீத மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

A public opinion poll was conducted about Udhayanidhi Stalin
A public opinion poll was conducted about Udhayanidhi Stalin

உதயநிதி வேண்டவே வேண்டாம்

2026 ஆம் ஆண்டு திமுக சார்பாக உதயநிதி முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கினால் நீங்கள் வாக்களிப்பீர்களா என்று இளைஞர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கிட்டத்தட்ட 56 சதவீத இளைஞர்கள் உதயநிதி வேண்டாம் என்ற பதிலை வழங்கியுள்ளார்கள்.

தமிழக இளைஞர்கள்யிடம் ஒருமித்த கருத்து உள்ளது அதாவது நேர்மையான படித்த இளம் அரசியல் தலைவர்கள் வந்தால் நாங்கள் நிச்சயம் வரவேற்போம், என ஒரே கருத்தை தமிழக இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் நேரடியாக நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

18 வயது முதல் 26 வயது வரை உள்ள பெண்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் உதயநிதி மீது அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

பட்டப்படிப்பு படித்த பெண்கள் திருமணம் செய்தால் அவர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வந்தது,அந்த திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது, எங்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பெண்கள் தெரிவிக்கிறார்கள், அதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு மறுபடியும் தேவை என தெரிவிக்கிறார்கள்.

12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் அவர்களுக்கு உதயநிதி மீது கோபம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது,முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால்,அவர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள்,இந்த மடிக்கணினி திட்டம் என்பது கல்லூரி மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது,கிராமப்புற மாணவர்களுக்கு கணினி பயன்படுத்தும் வாய்ப்பு இந்த திட்ட மூலம் ஏற்படுத்தப்பட்டது,இந்த திட்டம் மறுபடியும் தேவையான கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

40 வயது முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் கிட்டத்தட்ட 52% பொதுமக்கள் உதயநிதி வேண்டாம் என்ற கருத்தை தெரிவிக்கிறார்கள்,தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி மற்ற கட்சி தலைவர்களை பற்றி தரம் தாழ்ந்த வார்த்தை பயன்படுத்துகிறார்,இது போன்றவர்கள் நாட்டில் முதலமைச்சராக வந்தால் நிச்சயம் அவர்களால் நேர்மையான ஆட்சியை நடத்த முடியாது என்று கருத்தை தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் குறிப்பாக ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான பணிகள், எலக்ட்ரீசியன் பணி, வீட்டு வேலை செய்யும் நபர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் கிட்டத்தட்ட 68 சதவீத மக்கள் திமுக மற்றும் உதயநிதி வேண்டாம் என்று தெரிவிக்கிறார்கள்.

அதில் முக்கியமான காரணம் அம்மா உணவகம் சரியாக செயல்படுத்தப்படவில்லை அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த அம்மா உணவகம் மூலம் 20 ரூபாய் இருந்தால் போதும் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு சாப்பிட்டு பணத்தை மிச்ச படுத்த முடியும் இந்த அம்மா உணவகம் சென்னை போன்ற பெருநகரங்களில் சரியாக செயல்படுத்தப்படவில்லை மற்றும் உணவின் தரம் திமுக ஆட்சியில் குறைந்துள்ளது என்று பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி குறைந்தபட்சம் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யும்,இந்த சூழ்நிலையில் அம்மா உணவகம் நன்றாக செயல்பட்டால் எங்களுக்கு உணவுக்கு செலவழிக்கும் பணம் சேமிக்கப்படும் என்று தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக முன்னாள் மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் அந்த திட்டம் தொடர்ந்து 2021 வரை மக்கள் இடத்தில் இருந்ததால் அது மக்களுக்கு பழக்கப்பட்டு விட்டது.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அத்தைக்கு திட்டங்களை நிறுத்தியதால் மக்களுக்கு திமுக மீது கோபம் ஏற்பட்டுள்ளது எங்களுக்கு மறுபடியும் அதுபோன்ற திட்டங்கள் தேவை என மக்கள் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.

குறிப்பாக விலையில்லா ஆடு மாடு கோழி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி திட்டம், அம்மா உணவக திட்டம், இந்த திட்டங்களை திமுக நிறுத்தி இருக்கக் கூடாது இந்த திட்டங்கள் கண்டிப்பாக எங்களுக்கு தேவை மக்கள் ஒருமித்த கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

கட்டுமான பணிகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..!

தமிழகத்தில் இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மீது 58% மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை இன்னும் தமிழகத்தில் இரண்டு வருடம் திமுக ஆட்சி இருக்கிறது.

இந்த காலகட்டங்களில் மக்கள் விரும்பும் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே உதயநிதியால் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்க முடியும் இல்லையென்றால் 2026 ஆம் ஆண்டு திமுக 30 தொகுதிகளில் கூட வெற்றி பெறாத சூழ்நிலை உள்ளது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment