குளம் போல் காட்சியளிக்கும் காவிரி ஆறு தண்ணீர் வரத்து 20 முதல் 30 கன அடி தண்ணீர்..!The Cauvery river looks like a pool with reduced water flow

The Cauvery river looks like a pool with reduced water flow

குளம் போல் காட்சியளிக்கும் காவிரி ஆறு தண்ணீர் வரத்து 20 முதல் 30 கன அடி தண்ணீர்..!

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது கடந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் சில மாவட்டங்களில் குறைந்த அளவு பொலிந்தது கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மறுக்கிறது எங்கள் மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை.

எங்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது இதனால் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்று கர்நாடக அரசு வெளிப்படையாக தெரிவிக்கிறது.

காவேரி ஆறு தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் நுழைகிறது சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, மாவட்டங்கள் வழியாக சென்று பூம்புகார் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது.

காவிரி ஆறு மூலம் தமிழ்நாட்டில் 4 லட்சத்திற்கு அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு நீர் பாசனம் பெறுகிறது குறிப்பாக சேலம்,ஈரோடு, தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, போன்ற மாவட்டங்களில் நெல் விளைச்சல் அதிகம்.

The Cauvery river looks like a pool with reduced water flow
The Cauvery river looks like a pool with reduced water flow

காவிரி ஆற்றில் நீர்வரத்து ஏன் குறைவு

தென்மேற்கு பருவமழை போதிய அளவு கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பொழியவில்லை அங்கு உள்ள கிருஷ்ணா, கபினி போன்ற அணைகள் நிரம்பி மீதமுள்ள நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் அந்த நீர் மூலம் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை நிரம்பிவிடும்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் மலைப்பொழிவு குறைவு காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விட முடியாது என்று வெளிப்படையாக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிக்கிறது.

தற்போது காவிரி ஆற்றில் 20 முதல் 30 கன அடி தண்ணீர் செல்கிறது இதனால் ஆற்றில் உள்ள பாறைகள் தெரிகிறது காவிரி ஆறு குளம் போல் காட்சியளிக்கிறது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து அந்த நீரை இரண்டு மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது, தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் தண்ணீர் எடுக்கும் இடத்தில் குளம் போல் காட்சியளிக்கும் காவிரி ஆறு.

அண்ணாமலையை ஏற்றுக் கொள்வீர்களா என்று தமிழக இளைஞர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 58 அடியாக உள்ளது நீர்வரத்து மிகவும் குறைவு மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் தற்போது திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணையில் தண்ணீர் 58 அடியாக இருப்பதால் மேட்டூர் அணையும் குளம் போல் காட்சியளிக்கிறது இந்த நேரத்தில் மேட்டூர் அணையை தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment