தர்மபுரியில் கனரக வாகனங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் பொதுமக்கள்..!People going to election campaign in Dharmapuri in heavy vehicles

People going to election campaign in Dharmapuri in heavy vehicles

தர்மபுரியில் கனரக வாகனங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் பொதுமக்கள்..!

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நம் நாட்டில் 7 கட்டமாக நடைபெறுகிறது முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு, பிரச்சாரத்திற்கு ஏப்ரல் 17ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி தீவிரமான வெயில் வாட்டி வதைக்கிறது, அதையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிப்பில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் இன்று திமுக மற்றும் பாமக கட்சி தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள், அதற்கு பொது மக்களை கனரக வாகனங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.

தர்மபுரி கரூர் போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வெப்ப சலனம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரச்சாரத்திற்கு வந்தால் உணவு மற்றும் 500 ரூபாய் பணம் என்று அரசியல் கட்சிகள் பொதுமக்களை வெயிலில் ஆபத்தான முறையில் கனரக வாகனங்களில் அழைத்துச் செல்கிறார்கள்.

காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்குமா

தர்மபுரி மாவட்டத்தில் கனரக வாகனங்களில் பொதுமக்களை அழைத்து செல்லக்கூடாது என்று காவல்துறை ஏற்கனவே பலமுறை அறிவித்துள்ளது அதையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள்.

கனராக வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட மக்களை அழைத்துச் செல்கிறார்கள், இது குறித்து காவல்துறை இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

People going to election campaign in Dharmapuri in heavy vehicles
People going to election campaign in Dharmapuri in heavy vehicles

மக்களுக்கு எப்பொழுது விழிப்புணர்வு கிடைக்கும்

தர்மபுரி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பொது மக்களை இது போன்ற கனரக வாகனங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் கொடுத்து அழைத்து செல்கிறார்கள்.

கனரக வாகனங்களில் பொதுமக்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட காவல்துறை ஏற்கனவே பலமுறை அறிவித்துள்ளது.

அதையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் இது போன்று மக்களை அழைத்து செல்வதால் திடீரென்று விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த தேர்தல் மூலம் எந்த கட்சி தனது வாக்கு வங்கியை அதிகரிக்கும்..!

அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் நேரங்களில் மட்டுமே தொகுதி பக்கம் வந்து வாக்கு சேகரித்து வெற்றி பெற்று மறுபடியும் 5 ஆண்டுகள் தொகுதி பக்கம் வருவது இல்லை இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கடுமையான வெயிலிலும் பொதுமக்களை பாடாய்படுத்தும் இந்த அரசியல் தலைவர்களுக்கு பொதுமக்கள் சரியான பாடம் கற்பிக்க நேர்மையான தலைவரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே மக்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment