25 வருடத்திற்கு முன்பு நிச்சயம் பழி வாங்குவேன் என்று சபதம் எடுத்த திருமா இப்பொழுது அதனை செய்து கொண்டிருக்கிறார்..!Thiruma who took a vow to take revenge 25 years ago

Thiruma who took a vow to take revenge 25 years ago

25 வருடத்திற்கு முன்பு நிச்சயம் பழி வாங்குவேன் என்று சபதம் எடுத்த திருமா இப்பொழுது அதனை செய்து கொண்டிருக்கிறார்..!

விடுதலை சிறுத்தை என்ற இயக்கத்தை நடத்தி வந்த திருமாவளவன் வேறு வழியின்றி கட்சியாக மாற்றினார் கடந்த 2000 ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டு கால கட்டங்களில் திமுகவுடன் கூட்டணி வைத்த திருமா ஒரு சீட்டிற்கு பல நாள் கெஞ்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் திருமாவை நேரடியாக ஆபாசமான வார்த்தைகளிலும் திட்டி உள்ளார்கள் முக்கியமாக மு கருணாநிதியிடம் திருமா தொகுதி பங்கீடு நடத்திய போது நீங்கள் பொது தொகுதிகளை கேட்கலாமா என கருணாநிதி கேட்ட கேள்வி திருமாவை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் திருமாவை எப்பொழுதும் அசிங்கப்படுத்தியது திமுக இதனை பொறுத்துக் கொண்டு திருமா வேறு வழி இன்றி கட்சியை நடத்தினார் காரணம் கட்சியை வளர்க்க வேண்டும் கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும்.

அசைக்க முடியாத பலமான இயக்கமாக கட்சியை வளர்க்க வேண்டும் என்ற முனைப்பு ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது என்னதான் திமுக உடன் கூட்டணி இருந்தாலும் திமுக அமைச்சர்கள் மற்றும் அமைச்சர் மகன்கள் கவுன்சிலர்கள் திருமாவை கண்டால் ஆபாசமாக பேசுவது.

திருமாவுடன் வாகனத்தில் பயணம் செய்யாமல் தவிர்ப்பது திருமா கொடியை தவிர்ப்பது அவருடன் உணவு அருந்துவது தவிர்ப்பது போன்ற அனைத்தையும் செய்து வந்தார்கள் இவை அனைத்தையும் ஒரு பக்கம் மனதிற்குள் வைத்து சொல்ல முடியாத துக்கங்களையும் திருமா தாங்கி வந்துள்ளார்,சரியான காலம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் காத்திருந்தார்.

தற்போது அந்தக் காலம் கனிந்து விட்டது

தொல் திருமாவளவன் தமிழகத்தில் அசைக்க முடியாத மாபெரும் அரசியல் தலைவராக மாறிவிட்டார் பாமகவின் வீழ்ச்சி திருமாவின் எழுச்சி தற்போது பாமக தன்னுடைய வாக்கு வங்கியை இழந்து விட்டது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

வன்னியர்கள் பாமகவை நம்பவில்லை வாக்குகளை பிரித்து செலுத்துகிறார்கள் ஆனால் தலித் இன மக்கள் குறிப்பாக (பறையர் இன சமுதாய மக்கள்) திருமா சொல்லும் வாக்கை மந்திரவாக்காக நம்புகிறார்கள்.

அவர் கைகாட்டும் கட்சிக்கு 100% வாக்குகளை செலுத்துகிறார்கள் இத்தனை நாள் இதற்காகத்தான் திருமா காத்திருந்தார் 24 வருடமாக என்னை கேலி கிண்டல் செய்து அசிங்கப்படுத்திய கட்சிகளுக்கு நான் யார் என்று இப்பொழுது காண்பிக்கிறேன் என்று தன்னுடைய தன்மானத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார் திருமா.

திடீரென்று திமுகவை அட்டாக் செய்வதை யாரும் எதிர்பார்க்கவில்லை

திமுகவில் நான் இல்லை என்றால் திமுகவின் வீழ்ச்சி என்பது அனைவரும் அறிந்தது நான் சொன்னால் அதை திமுக செய்ய வேண்டும் இல்லையென்றால் நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறேன் அங்கு எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது.

அமைச்சர் பதவி கிடைக்கும் மேலும் அதிமுக எப்பொழுதும் மக்களிடத்தில் ஒரு நேர்மறையான கட்சியாக இருக்கிறது முக்கியமாக அங்கு மரியாதை என்பது இருக்கும் என்னுடைய கட்சிக்காரர்களும் தொண்டர்களும் என்னுடைய சமுதாய மக்களும் அதிமுக பக்கம் சென்று விடலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எனக்கு உரிய மரியாதை கொடுத்தார்கள் அவர் அரசியலில் என்னுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர் கொடுத்தார்.

அவரிடம் சாதி மதம் வேறுபாடு பார்க்க முடியாது அவர் எப்பொழுதும் அவருடைய கட்சியை வளர்ப்பதில் கவனமாக இருந்தார் அவர் கூட்டணி பற்றி யோசிக்க மாட்டார் அவரிடம் கூட்டணி சென்றால் அவர் வெளிப்படையாக தெரிவித்து விடுவார்.

என்னிடம் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் நான் இதைதான் செய்வேன் விருப்பமாக இருந்தால் இருங்கள் இல்லையென்றால் நீங்கள் சென்று விடுங்கள் என்று நேரடியாக தெரிவித்து விடுவார் அப்படி தெரிவிப்பது நல்லது.

கூட்டணி என்ற பெயரில் மரியாதை இல்லாமல் நடத்துவது காரில் அருகில் அமரக்கூட மறுப்பது போன்ற பல்வேறு இன்னல்களை நான் பல நாட்கள் சந்தித்து வந்துள்ளேன் அதிமுகவுடன் இதுவரை கூட்டணி வைக்கவில்லை இருந்தாலும்.

அங்கு எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை என்பது எப்பொழுதும் கிடைக்கிறது இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்டவர்கள் எனக்கு எப்பொழுதும் மரியாதை கொடுத்துள்ளார்கள்.

பலமுறை கூட்டணிக்கு அழைத்துள்ளார்கள் அதிமுக என்பது அசைக்க முடியாத இயக்கம் அங்கு அவர்கள் வலுவாக இருக்கிறார்கள் தற்போது தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் என்னுடைய மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

என்னுடைய மக்கள் எனக்கு கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியவில்லை 2026 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றால் நிச்சயம் எனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்பட்டு விடும்.

2026 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி என்பது அனைவரும் அறிந்தது

தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டால் தேவையானவற்றை பெற்றுக் கொள்ளலாம் பாமக, நாம் தமிழர் கட்சி, விஜய் உள்ளிட்டவர்கள் மிக விரைவில் அதிமுகவுடன் இணைந்து முக்கிய பதவிகளையும் தொகுதிகளையும் பெற்று விடுவார்கள்.

மதுரையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சுங்கச்சாவடியில் பணம் செலுத்த முடியாததால்..!

அதற்கு முன்பு நாம் சென்று விட்டால் நமக்கு அனைத்தும் கிடைக்கும் உடனடியாக வேலையை தொடங்க வேண்டும் என தன்னுடைய முக்கிய நம்பிக்கையான நபர்களிடம் தன்னுடைய பல நாள் மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார் திருமா.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment